முற்றம்
Typography

யதார்த்த வகை ஓவியங்கள் மூலம் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை ஓவியங்கள் புகழ்பெற்றவை. அதுபோல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு, இயற்கை சீற்றத்திற்கும் இவர் ஓவியங்கள் மூலம் குரல் கொடுத்து வருகிறார்.

தற்போது உலகமே கொரோனா வைரஸ் என்ற நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த நோயின் தாக்கம் உலக நாடுகள் முழுக்க பரவி மக்களுக்கும் மக்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் மக்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுப்பதற்காகவும் அவர்களை இந்த நோயில் இருந்து மீட்க தன்னலமற்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் ஒரு சின்ன பங்களிப்பை கொடுத்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

இதுகுறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘ கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் இவர்கள் அனைவருமே இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற மிகப் பெரும் பங்காற்றி வருகிறார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளை காப்பாற்ற போராடும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது சிறிய அர்ப்பணிப்பு தர விரும்புகிறேன். அவர்களது சீரிய பணிக்கு செய்யும் சிறிய கைமாறாக என்னுடைய இந்த ஓவியங்களை அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.

சீரிய பணிக்கு ஶ்ரீதரின் அர்ப்பணிப்பில் உருவான ஒவியங்களை கானொளியாகக் காணலாம் :

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்