முற்றம்
Typography

இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு பிறந்து விட்டது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை எல்லோருக்கும் பரிமாறி மகிழ்ந்தோம்.புதிய ஆண்டில் காலடி எடுத்து வைத்து விட்டோம்.

இவ்வருடத்தில் எப்படி பிரயோசனமாக எமக்கு நன்மை தர வாழ்வது, என்று எத்தனை பேர் திட்டம் தீட்டியிருப்பீர்கள்?

புதிய வருடப்பிறப்பை கொண்டாடிட உறவுகளோடும் ,நன்பர்களோடும் செர்ந்து கழிப்பது இனிய அனுபவம் ..அந்த நாட்களில் எதிர் காலத்தை எண்ணி சிறிது சிந்திப்போம்..அது மிக அவசியமாகும்.காலங்கள் கடவுள் பாடும் ராகங்கள் அவை வீணடிக்கப்பட்டு விட்டால்.திரும்பக் கிடைப்பதில்லை. ஒருவருடம் முடிகிறது என்றால் ஒருவயது முடிகிறது என்று பொருள் வயதுக்கு ஏறுகிற சக்தி உண்டே தவிர இறங்குகிற சக்தி கிடையாது.

எத்தனை வயது வரை ஒருவன் வாழ்ந்தான் என்பது கேள்வியல்ல; ஒவ்வொரு வயதிலும் அவன் என்னசெய்தான் என்பதே கேள்வி முப்பத்திரண்டு வயதிற்குள் இந்து சமயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர், தேசிய ஒருமைப்பாட்டுக்கு இலக்கணம் வகுத்தவர். அந்தவயதிற்குள் ஆதி சங்கரர் ஆற்றிய அரும்பணியே அவரை ஒரு உதாரண புருசராக மகானாக இன்றும் போற்றப்படுகிறார். வயதுகள் கூடலாம் குறையலாம், ஆனால் ஓடுகிற வருசங்கள் உருப்படியான வருசங்களாக இருக்க வேண்டும்.

உண்டோம் உறங்கினோம் விழித்தோம் என்று வாழ்வதல்ல வாழ்க்கை. எந்தக்காரியத்தை எந்தக் காலத்தில் செய்ய வேண்டுமோ அந்தக்காலத்தில் செய்து விட வேண்டும் இல்லையேல் பின்னால் வருந்த நேரிடும். காலங்களிலேயே காரியங்களின் வெற்றி தோல்விகள் அடங்கி இருக்கின்றன. நம்முடைய நன்பரும் பகைவரும் என இருப்பவரும் இக்காலங்களே ஆகும்.. காலங்களே தருகின்றன ,காலங்களே பறிக்கின்றன..இக்காலங்களே நம்மை சிரிக்கவும் அழவும் வைக்கின்றன.

ஞாலம் கருதினும் கைகூடும் காலம் கருதி இடத்தால் செயின். என்றனன் ஐயன் திருவள்ளுவன் ஆகவே காலம் பார்த்து காரியம் செய்தால் பூமியையே விலைக்கு வாங்கலாம். அன்பு எண்ணங்களை விதைப்போம். வாருங்கள். அதைச்செயற்படுத்துவோம். இப்பூமி சூடாகிறது. பூமியைச் சுற்றி எங்கும் வெப்பம் அதிகரித்து செல்ல அதனால் உயிரினங்களும் பயிரினங்களும் அழியும் நிலை உருவாகிறது. ஆம் எமது மூளையும் அதிக சூடாகிறது. பூமியின் மண்நிலங்கள் சூடாகிறது அதற்கு நிலத்தடி நீர் சிலதாவரங்களால் உறிஞ்சப்படுகிறது.

உதாரணத்திற்கு கருவேலமரங்கள் இலங்கையின் வடபகுதிப்பிரதேசங்களில் அதிகமாகக் காணப்படுகின்றன அவை அதிகளவில் நிலத்தின் கீழ்நீரை அதிகமாக உறிஞ்சிவிடுவதால் வரட்சியும் நீர்ப்பற்றாக்குறையும் ஏற்படக் காரணமாகிறது. இப்படி மண்சூடாகி பூமிசூடாகி நீர்சூடாகி உயிர்களின் மூளையும் சூடாகி அழிய விடாது காலத்தே பயிர் வளர்ப்போம்.

இயற்கையாக் கிடைகும் பூமரங்கள் உணவுத்தாவரங்கள் நிழல்மரங்கள், இப்படி கிடைக்கும் பயிர் செடிகொடிகளை நாள் ஒன்றுக்கு ஒன்று இரண்டு என்று அதிக மரங்களை நாட்டி பசுமை எங்கும் நிலவச் செய்வோம் .தாவரங்களை நாம் அழித்தால் காலம் எம்மை அழித்து விடும்..உயிர்காக்கும் விதைகளை நாம் விதைத்தால் மரமாகி எம் உயிர்க்காலங்களை கூட்டி எம்மைக் காத்து விடும். அதுவே எமக்கு பெரிய அதிர்ஸ்டம் ஆகும்.அந்த அதிர்ஸ்டம் வேறு ஒன்றும் இல்லை இனிவரும் காலத்தை ஒழுங்காகப் பிடித்துக் கொள்வதே. அதற்கு நீங்கள் யாவரும் இந்நாளில் இருந்தே பூமியை பசுமையாக்கும் நல்ல எண்ணங்களை உருவாக்கி உயிர் வாழுங்கள்.

நன்றி, 4தமிழ்மீடியாவுக்காக அருந்தா.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்