முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில் தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு படகுகள், மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் கடந்த திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். 

Read more: நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

கருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம் இயங்கியது. அதில் இடைக்கிடை கருணாநிதி அல்லது அதை இயக்கிய யாரோ ஒருவர் கருத்துக்களைத் தெரிவித்து வந்தார். ஒரு நாள் யாரோ ஒரு ஈழத்தமிழர் கருணாநிதிக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளில் குறிப்பெழுதியிருந்தார். அதற்குக் கருணாநிதி “ஏனப்பா வயதை மதித்தாவது எழுத வேண்டாமா?” என்ற தொனிப்பட ஒரு குறிப்பைப் போட்டிருந்தார். அதற்கு மேற்படி ஈழத்தமிழர் “நீங்கள் மட்டும் பார்வதியம்மாவின் வயதை மதித்தீர்களா?” என்று கேள்வி கேட்டிருந்தார். அக்கேள்விக்கு கருணாநிதி எதிர்வினையாற்றவில்லை. 

Read more: ஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும் ஈழ-தமிழக உறவுகளும்! (நிலாந்தன்)

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி, வட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் அண்மை நாட்களாகப் பதட்டம் நிலவுகிறது. இது தொடர்பில் நேற்று அராலியில் காலையும் பின்னேரமும் இரு சந்திப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நாளை அப்பகுதி பிரதேச சபையினர் யாழ் அரச உயரதிகாரிகளை சந்திக்கவிருப்பதாகக் கூறப்படுகிறது.

Read more: குள்ள மனிதன் கிறீஸ் மனிதனின் தம்பியா? (நிலாந்தன்)

“தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. முஸ்லிம் அரசியல் வாதிகளைப் பாருங்கள். அவர்கள் இந்த நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ அதோடு இணைந்து தமது பிரதேசங்களுக்கும் தமது மக்களுக்கும் பெரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் தமிழ் அரசியற் தலைவர்கள் தமக்குள் முரண்பட்டுக்கொண்டு எதிர்ப்பு அரசியலை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்…”இவ்வாறு கூறியிருப்பவர் வடக்கு மாகாண ஆளுநர் குரே. சில நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தில் நடந்த வருடாந்தப் பரிசளிப்பு விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய போது அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 

Read more: தமிழ்த் தலைவர்கள் ஏன் இணக்க அரசியல் செய்ய முடியாது? (நிலாந்தன்)

அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் யாழ். மாநகர சபை உறுப்பினர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கும், வாக்களிப்பதற்கும் இடைக்காலத் தடை விதித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 03) உத்தரவிட்டிருக்கின்றது. 

Read more: வதிவிட சிக்கலும் மணிவண்ணன் மீதான தடையும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

புதிய அரசியலமைப்புக்கான வாய்ப்புகள் அனைத்தும் பொய்த்துப்போன புள்ளியில், இரா.சம்பந்தனுக்கும் ராஜபக்ஷ சகோதரர்களுக்கும் இடையிலான மிக முக்கிய சந்திப்பொன்று, அண்மையில் இடம்பெற்றிருக்கின்றது. இந்தச் சந்திப்பின் ஏற்பாட்டாளராக இலங்கைக்கான சீனத்தூதுவர் செங் ஷியுவான் இருந்திருக்கின்றார் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. 

Read more: ராஜபக்ஷக்களுடனான சந்திப்பு: சம்பந்தன் யாரை எச்சரிக்கிறார்? (புருஜோத்தமன் தங்கமயில்)

“…(கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது), தாக்குதல் நடத்த வந்த குண்டர்களிடமிருந்து, அயலிலுள்ள பௌத்த பிக்கு ஒருவரால் நாங்கள் காப்பாற்றப்பட்டோம். இதே மாதிரியாக, சிங்கள நண்பர்களால் காப்பாற்றப்பட்ட தமிழ் மக்களின் கதைகளைக் கேட்கும் போது, இந்த நாட்டின் கட்டமைப்புக்குள் சக பிரஜைகளாக (நாங்கள்), பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது, மீண்டும் மீண்டும் ஞாபகத்துக்கு வருகிறது. பதிலாக, தமிழர்களாகிய நாங்கள், மற்றவர்களின் தயாள குணத்தில் தங்கியிருக்க வேண்டியிருக்கின்றது. இது, ஒரு நாடு தன்னுடைய பிரஜைகளின் மீது செலுத்தும் மிகப்பெரிய அவமானமாகும்...” -இவ்வாறு, கறுப்பு ஜூலை வன்முறைகளுக்குள் அகப்பட்டுத் தப்பிய எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய அனுபவங்களைப் பகிர்கிறார்.

Read more: கறுப்பு ஜூலை எதைப் பேச வேண்டும்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்