வடக்கு மாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், தன்னுடைய பாதுகாப்புக்காக, பாதுகாப்பு அமைச்சிடம் கைத்துப்பாக்கி ஒன்றைப் பெற்றுக்கொண்டுள்ளதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் அயூப் அஸ்மின் தெரிவித்திருக்கின்றார். வடக்கு மாகாண சபையின் அமைச்சரவைக் குழப்பங்கள் குறித்து, ஆராய்வதற்காக நேற்று முன்தினம் திங்கட்கிழமை விசேட சபை அமர்வொன்று நடாத்தப்பட்டது. அங்கு பேசும் போதே, அஸ்மின் மேற்கண்ட விடயத்தைக் குறிப்பிட்டிருக்கின்றார். 

Read more: அஸ்மினும் ஒரு கைத்துப்பாக்கிக் குற்றச்சாட்டும் (புருஜோத்தமன் தங்கமயில்)

விஜயகலாவின் பேச்சால் அவர் இழந்தவை எவை? பெற்றவை எவை? உடனடிக்கு அவர் தனது பிரதி அமைச்சர் பதவியை இழந்திருக்கிறார். ஆனால் நீண்ட எதிர்காலத்துக்கு தனது பாராளுமன்ற ஆசனத்தைப் பாதுகாத்திருக்கிறார். அவர் புலிகளைப் போற்றிப் பேசியதற்காக அவர் பதவியை இழந்தமை அவருடைய ஆதரவாளர்கள் மத்தியில் அவரைக் கதாநாயகி ஆக்கியிருக்கிறது. இது அவருடைய வாக்குத் தளத்தைப் பலப்படுத்தியிருக்கிறது. எனவே உடனடிக்கு நட்டம் என்றாலும் நீண்ட கால நோக்கில் அவருக்கு இலாபமே கிடைக்கும். பதவியை இழந்தமை அவருக்கு ஒரு அரசியல் முதலீடாக அமையும். 

Read more: விஜயகலா: வாய்ச்சொல் வீரர்களின் அரசியல்! (நிலாந்தன்)

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்ற பின்னர், நிர்வாகம் சம்பந்தப்பட்ட விடயங்களை முன்னிறுத்தும் இரண்டு முக்கிய வழக்குகளில், முதல் பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டிருக்கின்றார். 

Read more: விக்னேஸ்வரனும் ஓர் இடைக்கால உத்தரவும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக வர வேண்டும் என்பது மாவை சேனாதிராஜாவின் ஒரு தசாப்த காலக் கனவு. இறுதி மோதல்களுக்குப் பின்னரான, அரசியல் கள யதார்த்தங்களை உள்வாங்கி, மாகாணசபைத் தேர்தல்களில் போட்டியிடுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்தது முதல், முதலமைச்சர் கனவு மாவையிடம் நீடிக்கின்றது. 

Read more: மாவையின் முதலமைச்சர் கனவு பலிக்குமா? (புருஜோத்தமன் தங்கமயில்)

“...தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை மிக முக்கியமானது. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் முன்னெடுத்துள்ள தொடர் போராட்டங்களை நாம் கவனத்தில் எடுக்கின்றோம். ஆனால், அந்தப் போராட்டங்கள் தொடர்பில் எமக்குச் சில ஐயப்பாடுகள் உண்டு. அப்பாவித் தாய்மார்களின் கண்ணீரை, சில தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. இதனால், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினை தொடர்பில், நாங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிரதான ஊடகங்களில் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறோம்....” மேற்கண்டவாறு ஐரோப்பிய நாடொன்றின் இலங்கைக்கான தூதுவர், அண்மையில் இடம்பெற்ற தனிப்பட்ட உரையாடலொன்றின் போது தெரிவித்திருந்தார். 

Read more: போராட்டங்களின் போக்கும் நம்பிக்கையீனங்களின் தொடர்ச்சியும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய, ‘நீதியரசர் பேசுகிறார்’ எனும் நூலின் முதலாவது தொகுதி, அண்மையில் (24) யாழ்ப்பாணத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. அந்நிகழ்வில், விசேட அதிதியாகக் கலந்து கொண்ட இரா.சம்பந்தன், நூலை வெளியிட்டு வைத்தார். 

Read more: விக்னேஸ்வரன் எந்த இடத்தை நோக்கி நகர்கிறார்? (புருஜோத்தமன் தங்கமயில்)

1995இல் புலிகள் இயக்கம் தமது ஆட்சி மையத்தை வன்னிப் பெருநிலத்திற்கு நகர்த்தியது. அதிலிருந்து தொடங்கி 2009ஆம் ஆண்டு வரை அங்கு ஓர் அரை அரசை அந்த அமைப்பு நிர்வகித்தது. அந்த அரசு இலங்கைத் தீவில் எழுச்சி பெற்ற இரண்டாவது அதிகார மையமாகவும் இரண்டாவது பெரிய பொருளாதார மையமாகவும் திகழ்ந்தது. அக்காலப் பகுதியில் வன்னிப் பொதுச்சனங்கள் புலிகளின் நிர்வாகக் கட்டமைப்பில் வேலை செய்தார்கள். ஆயிரக் கணக்கான பொது மக்களுக்கு புலிகள் இயக்கம் வேலை வழங்கியது. இலங்கை அரசாங்கத்திற்கு அடுத்த படியாக மிகப்பெரிய வேலை வழங்குனராக அந்த அரை அரசு காணப்பட்டது. 

Read more: எம்ஜியார்களாக மாறிய படை அதிகாரிகள்! (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்