கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தரிசனங்களை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சிகள் முன்வைத்த இலக்குகளிலும், இலக்குகளை அடைவதற்காக இக் கட்சிகள் தெரிந்தெடுத்த பாதைகளிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தது. பொதுத் தேர்தற் கால அரசியல் உரையாடல்களில் இம் முரண்பாடுகள் ‘வன் வலு’எதிர் ‘மென் வலு’வாகச் சித்தரிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். 

முப்பது  வருடங்களாக  இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை   தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு   பட்டறிவு வரவில்லை போலும். எமது இனம் உரிமைக்கான தீப ஒளியை காணவேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை  அடையாளம் காணவேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின்  நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம்பெற்ற சில முக்கிய  சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.  

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடந்த வாரம் பொலிஸாரினால் மிலேச்சத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது, தமிழ் மக்களைப் பெரும் கவலைக்கும் அதிர்வுக்கும் உள்ளாக்கியிருக்கின்றது. பெரும் படுகொலைக் களங்களைத் தொடர்ச்சியாகச் சந்தித்து வந்திருக்கின்ற மக்கள் என்கிற ரீதியில், ஒவ்வொரு உயிரையும் தக்க வைப்பதற்கான தமிழ் மக்களின் போராட்டம் மிகப் பெரியது. அப்படிப்பட்ட நிலையில்தான், பொலிஸாரின் அதிகார அத்துமீறலின் நிமித்தம் இரண்டு உயிர்கள் பலிவாங்கப்பட்டிருக்கின்றன.  

வேலுப்பிள்ளை பிரபாகரனின் பெயரை முன்னிறுத்திக் கொண்டு என்ன வகையான ‘வேளாண்மை’யையும் தமிழ் மக்களிடம் செழிப்புடன் செய்யலாம் என்கிற திட்டத்தோடும், எதிர்பார்ப்போடும் பல தரப்பினரும் வடக்கு- கிழக்கை சுற்றி வருகின்றனர். குறிப்பாக, பிரபாகரன் நேரடியாக ஆளுமை செலுத்திக் கொண்டிருந்த காலத்தில், ஓடி ஒழிந்து கொண்டவர்களும், அரங்கிற்கு வர மறுத்தவர்களும் கூட, பிரபாகரனின் அடையாளத்தை தங்களுடைய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள். அப்படியான நிலையில், இந்தத் தரப்பினரின் பின்னணி என்ன, நோக்கம் எவ்வகையானது?, என்பது பற்றியெல்லாம் தமிழ் மக்கள் மிகவும் அவதானத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது.  

குளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இலங்கைத் தீவில் சுமார் மூன்று தசாப்த காலங்களுக்கும் மேலாக நிலவி வந்த மிகக் குரூரமான ஒரு பாரம்பரியத்திலிருந்து உற்பத்தியாகிய ஒரு மனோநிலை அது. கடைசிக் கட்டப் போரில் நீரிலிருந்து மீனை வடித்தெடுப்பதற்காக கடலை இரத்தமாக்கிய ஒரு மனோ நிலையே அது. எனவே அந்த மனோ நிலையிலிருந்து தீர்க்கப்பட்ட வேட்டுகள் அரசியல் வேட்டுக்கள் தான். 

500 ஆண்டுகளுக்கு முன்னான ஐரோப்பாவில் தேவாலயங்கள் மன்னர்களை நிர்வகித்தன. மன்னர்கள் தங்களுடைய பிரபுகளின் வழியாக குடிகளை நிர்வகித்தனர். அன்றைக்கான அரசியல் தேவை மதத்தை தாண்டுவது. முதல் தொழிற்புரட்சி அப்போது தான் நடந்தது.

எழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று சி.வி.விக்னேஸ்வரன் தனது உரையின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தார். அவர் தனது உரையில் பாவித்த வார்த்தைகளிலும் சரி கருத்துக்களைத் தெரிவித்த விதத்திலும் சரி ஆகக் கூடிய பட்சம் அந்த உரையை ஒரு நல்லெண்ணச் சமிக்ஞையாகக் காட்டவே முற்பட்டார். 

More Articles ...

Most Read