வடக்கு மாகாண சபைக்கு ஒரு வயதாகிவிட்டது. ஒரு அரசியல் செய்முறையின் நன்மை தீமைகளை ஆராய்வதற்கு ஓராண்டு காலம் போதாது தான். ஓராண்டு என்பது ஒரு இனத்தின் வரலாற்றில் மிக அற்பமான ஒரு காலமே. ஆனால், மாகாண சபைத் தேர்தலில் வழங்கப்பட்ட விறுவிறுப்பான உணர்ச்சிகரமான, வாக்குறுதிகளுக்கூடாகப் பார்க்கும் போதும், கடந்த ஓராண்டு காலமாக இந்தியாவும் மேற்கு நாடுகளும் வடக்கு மாகாண சபைக்கு கொடுத்து வரும் முக்கியத்துவத்திற்கூடாக பார்க்கும் போதும், குறிப்பாக மே 19க்கு பின்னரான பொதுவான ஈழத் தமிழ் உளவியலுக்கூடாக பார்க்கும் போதும் வடக்கு மாகாண சபையின் ஓராண்டு காலம் என்பது கவனிப்புக்குரியதே. 

Read more: வடக்கு மாகாண சபை ஒரு பதுங்கும் புலியா? (நிலாந்தன்)

’என் ஆசையெல்லாம் தி.நகரில் ஒரு டபுள் பெட்ரூம் ஃப்ளாட், ஒரு மாருதி 800, 25 லட்ச ரூபா பேங்க் பேலன்ஸ், அவ்வளவுதான் ஆரம்பத்தில் என் லட்சியமா இருந்தது. அந்தப் பொருளாதாரக் கனவுகள் எப்பவோ நிறைவேறிடுச்சு. ஆனா, சினிமாவில்… மைல்ஸ் டு கோ!. மனசைத் தொடுற படங்கள், சயின்ஸ் ஃபிக்ஷன் மாதிரியான முயற்சிகள் செய்யணும்னு என் கனவுகள் எக்கச்சக்கமா இருக்கு. ‘அழகிய குயிலே’ போல சாஃப்ட்டான கதையில் என் சினிமா வாழ்க்கை ஆரம்பிச்சிருந்தா, என் பாதை, பயணமே வேற மாதிரி அமைஞ்சிருக்கும். ‘முதல்வன்’ முடிஞ்சதும் கமலுடன் நான் ஆரம்பிக்க இருந்த ‘ரோபோ’ அப்போ சாத்தியப்பட்டிருந்ததுன்னா, வேற சில புதுக் கதவுகள் திறந்திருக்கும். ஹாலிவுட் போல வேர்ல்டு மார்க்கெட்டுக்கு, உலக சினிமானு கொண்டாடப்படற நல்ல முயற்சிகளுக்கு இன்னும் இன்னும் உழைக்க வேண்டிய விஷயங்கள், தேட வேண்டிய திசைகள்னு சாத்தியங்கள் இருக்கு. நான் என் வேலைகளை சின்ஸியரா செய்துட்டே இருக்கேன். எதிர்காலம் எனக்காக என்ன வெச்சுட்டிருக்கோ, பார்க்கலாம்!’ – இயக்குநர் ஷங்கர் – ஆனந்த விகடன் பேட்டி – 22nd October 2006 (சிவாஜி வெளியீட்டுக்குச் சில மாதங்கள் முன்னர்) 

Read more: 'ஜெண்டில்மேன்' முதல் 'ஐ' வரை...! ('கருந்தேள்' ராஜேஸ்)

அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்படலாம், அரசியலமைப்பின் 18ஆம் சீர்திருத்தத்தின் விளைவாக மூன்றாவது தடவையாகவும் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்ற ஊகங்கள் அண்மைக்காலமாக பரவலாக எழுப்பப்பட்டிருக்கும் நிலையில், அவ்வாறு மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகுதியை சட்டரீதியாக இழந்துவிட்டார் என்ற கருத்தை சிங்களப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய செவ்வியின் வாயிலாகவும், அதன் பின்பு ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு எழுதிய கட்டுரையின் வாயிலாகவும் இலங்கையின் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் நந்த சில்வா (சரத் என் சில்வா) தெரிவித்திருக்கிறார். இது சட்ட, அரசியல் வட்டாரங்களில் புதிய வாதப்பொருளொன்றைத் தோற்றுவித்திருக்கிறது. 

Read more: மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? (என்.கே.அஷோக்பரன்)

இந்திய பிரதமரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்திருக்கிறார்கள். வழமை போல இந்தியா 13வது திருத்தத்தையே தீர்வாக முன்வைத்திருக்கிறது. மோடி வந்தால் மாற்றங்கள் வரும் என எதிர்பார்த்திருந்த தமிழர்களில் ஒரு பகுதியினர், மோடியும் எங்களை கைவிட்டு விட்டார் என்று வழமைபோல சலிக்கத் தொடங்கி விட்டார்கள். 

Read more: இராஜதந்திரப் போர் எனப்படுவது; பின்நோக்கிப் பாய்வதல்ல! (நிலாந்தன்)

ஸ்கொட்லாந்து பிரித்தானியாவிடமிருந்து பிரிந்து போக வேண்டுமா, இல்லையா என்பதற்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் பின்னணியில் இக்கட்டுரை எழுதப்படுகிறது. ஸ்கொட்டிஷ் மக்களின் முடிவு எதுவாகவும் இருக்கலாம். ஆனால், தமது தலைவிதியை அவர்களே தீர்மானிப்பதற்குரிய உரிமை அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பதே இங்கு முக்கியம்.

Read more: ஸ்கொட்லாந்தின் அனுபவத்திலிருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை! (நிலாந்தன்)

இவ்வாண்டு முடிவுக்குள் தனது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அஹிம்சை போராட்டங்களில் ஈடுபடப்போவதாக தமிழரசுக் கட்சி அறிவித்திருக்கிறது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இவ்வாறான அறைகூவல்களை விடுப்பது இது தான் முதற் தடவையல்ல. காலக்கெடு விதித்து ஒரு போராட்டத்தை தொடங்கப் போவதாக அறிவித்திருப்பதும் இது தான் முதற் தடவையல்ல. ரெலோ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சாகும் வரை உண்ணாவிரதம் ஒன்றை தொடங்க போவதாக அறிவித்திருந்ததை இங்கு நினைவுகூரலாம். எனினும், கூட்டமைப்பில் உள்ள கட்சிகளில் மிகப்பெரியதும் பல தசாப்த கால வரலாற்றையும் பாரம்பரியத்தையும்; கொண்டிருப்பதுமாகிய தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வவுனியாவில் நடந்த அக்கட்சியின் மாநாட்டில் வைத்து இவ்விதமாக அறிவித்திருப்பதை ஒரு வெற்றுக்கோஷமாக எடுத்துக் கொள்ள முடியுமா? அல்லது, வரும் ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தல்களை மனதில் வைத்து அவர் அப்படி அறிவித்திருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளலாமா? 

Read more: தமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடு…! (நிலாந்தன்)

இரண்டு திரைப்படங்கள் தமிழகத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளன. ஒன்று புலிப்பார்வை, மற்றையது கத்தி. இவ்விரு திரைப்படங்களுக்கும் ஆதரவான நிலைப்பாட்டை எடுத்த காரணத்தால் சீமானும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் நிகழ்ந்த சீமானின் சடுதியான எழுச்சியோடு ஒப்பிடுகையில் அண்மை வாரங்களில் அவருக்கு ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சியும் சடுதியானதே. சில வாரங்களுக்கு முன்புவரை முகநூலில் ஒரே அணியில் மிக நெருக்கமாக நின்று எதிர்த்தரப்பை ஈவிரக்கமின்றி தாக்கிய நண்பர்கள், இப்பொழுது ஒருவர் மற்றவரை ஈவிரக்கமின்றி தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். 

Read more: சீமானும், தமிழ்த் தேசியமும்! ( நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்