மட்டக்களப்பில் கிராம சேகவர் ஒருவருக்கு எதிராக பௌத்த பிக்கு ஒருவர் மேற்கொண்ட வெறித்தனமான- இனவாத தாக்குதல் தொடர்பான காணொளி ஒன்று, கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையங்களில் பரவலாக உலாவுகிறது.   

புதிய அரசியல் யாப்பில் இனப்பிரச்சினைக்கான தீர்வும் இணைக்கப்பட்டால் பெரும்பாலும் வரும் ஆண்டில் மாகாண சபைகள் கலைக்கப்படக்கூடும். அதன்பின் புதிய அதிகார கட்டமைப்பிற்கான ஒரு தேர்தல் நடைபெறக் கூடும். அத் தேர்தலில் விக்கினேஸ்வரனுக்கு தமிழரசுக் கட்சி இடம் கொடுக்காது என்பது ஒரு பரவலான ஊகம். விக்னேஸ்வரனும் அப்படித்தான் நம்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக அண்மையில் கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒரு பேட்டியில் கருத்துத் தெரிவித்திருந்தார். 

யாழ். கீரிமலைப் பகுதியில் 100 வீட்டுத்திட்டம் ஒன்றை கடந்த வாரம் அரசுத்தலைவர் மைத்திரி பொது மக்களிடம் கையளித்துள்ளார். இராணுவத்தின் பொறியியற் பிரிவின் ஒத்துழைப்போடு கட்டப்பட்ட இந்த நூறு வீட்டுத்திட்டத்திற்கு ‘நல்லிணக்கபுரம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடுகளின் உட்சுவர்களில் அரசுத் தலைவரின் படமும் குறிப்பிட்ட படைப்பிரிவின் படமும் தொங்க விடப்பட்டுள்ளன. 

கடந்த வருடப் பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசிய அரசியல் வெளியில் தமிழருக்கு முன்னால் தெளிவான, பிரத்தியேகத் தெரிவுகள் இரண்டு இருந்தன. ஒரு புறம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மறு புறத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தமிழ் அரசியல் எதிர்காலம் தொடர்பில் ஒன்றுக்கொன்று முரணான தரிசனங்களை முன்வைத்துத் தேர்தலைச் சந்தித்தன. இரு கட்சிகள் முன்வைத்த இலக்குகளிலும், இலக்குகளை அடைவதற்காக இக் கட்சிகள் தெரிந்தெடுத்த பாதைகளிலும் பாரிய வேறுபாடுகள் இருந்தது. பொதுத் தேர்தற் கால அரசியல் உரையாடல்களில் இம் முரண்பாடுகள் ‘வன் வலு’எதிர் ‘மென் வலு’வாகச் சித்தரிக்கப்பட்டது வாசகர்களுக்கு நினைவிருக்கும். 

ஆவா குழுவோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றஞ்சாட்டில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் சில இளைஞர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதில், தமிழ் அரசியல் கட்சியொன்றின் முன்னணி செயற்பாட்டாளர் ஒருவரும் அடக்கம்.  

இறுதிப் போரையும் அதில் அரசாங்கப் படைகள் பெற்றுக் கொண்ட வெற்றியையும் பாடசாலைப் பாடங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியிருக்கின்றார். வரலாறு எப்போதுமே வெற்றியாளர்களின் பக்கத்திலிருந்து எழுதப்பட்டு வந்திருக்கின்றது. அது, ‘வெற்றியாளர்களின் நீதி’ என்கிற ஏக மனநிலையைக் காலம் காலமாக மக்களிடம் கடந்தி வந்திருக்கின்றது. தோற்கடிக்கப்பட்டவர்கள் கோரிய நீதி என்ன? அல்லது தோல்வியடைவோம் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் போரிட்டார்கள்? மாண்டுபோனார்கள்? என்பது பற்றியெல்லாம் பெரிதாக யாருமே கரிசனை கொள்வதில்லை. அதுவே, ‘இராமாயணம், மகாபாரதம்’ உள்ளிட்ட இதிகாசங்களில் தொடங்கி நம்மீது வரலாறு என்று திணிக்கப்படுகின்ற ‘மகாவம்சம்’ போன்ற தொகுப்புக்கள் வரையிலும் தொடர்ந்து வந்திருக்கின்றது.  

முப்பது  வருடங்களாக  இந்தியாவின் நயவஞ்சக செயல்களின் பலனை   தமிழர் அனுபவித்தும் இன்னமும் பலருக்கு   பட்டறிவு வரவில்லை போலும். எமது இனம் உரிமைக்கான தீப ஒளியை காணவேண்டுமாயின் முதலில் எமது இனத்தின் உண்மையான எதிரி நரகாசுரன் யார் என்பதை  அடையாளம் காணவேண்டும். கடந்த காலத்தில் இந்திய நரகாசுரனின்  நயவஞ்சகத்தை மறந்தவர்களுக்காக வரலாற்றில் இடம்பெற்ற சில முக்கிய  சம்பவங்களை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.  இதன் பின்பு உண்மையான நரகாசுரன் யார் என்பதை நீங்களே அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.  

More Articles ...

Most Read