பொதுத் தேர்தலுக்கான திகதி இன்னமும் அறிவிக்கப்படாத நிலையிலும், பொதுத் தேர்தலுக்கான அரங்கு நாடு பூராவும் களைகட்டத் தொடங்கிவிட்டது. கூட்டணிப் பேச்சுக்கள், வேட்பாளர் தெரிவு இழுபறிகள், சமூக ஊடகங்களில் சண்டை சச்சரவுகள் என்று ஜனாதிபதித் தேர்தல் பரபரப்புக்கள் அடங்குவதற்குள் மீண்டும் தேர்தல் பரபரப்புக் காட்சிகள். அதுவும், தென் இலங்கையைக் காட்டிலும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில், பொதுத் தேர்தலுக்கான பரபரப்பு என்பது, முற்கூட்டியே ஆரம்பித்துவிட்டது. 

Read more: பொதுத் தேர்தலை நோக்கிய தமிழ்த் தேசியக் கட்சிகளின் நகர்வு! (புருஜோத்தமன் தங்கமயில்)

யாழ். மாநகர சபை அமர்வுகளில் சில ‘கௌரவ’ உறுப்பினர்கள் நடந்து கொள்ளும் விதம் அருவருப்பை ஊட்டுகின்றன. எந்தவித பொறுப்புணர்வும் இன்றி சாதி, மத ரீதியாவும், பிறப்பினை சந்தேகத்துக்கு உள்ளாக்கியும் கௌரவ உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்கிறார்கள். அதனை ஓர் அரசியல் நிலைப்பாடாகவே கொண்டு நடக்கவும் தலைப்படுகிறார்கள். அரசியல் அறிவும், அரசியல் ஒழுக்கமும் அற்ற நபர்களை அரசியல் கட்சிகள் மக்களிடம் ஆளுமைகளாக முன்னிறுத்தும் போது, ஏற்படுகின்ற அபத்தம் இது. 

Read more: தமிழ்த் தேசிய அரசியலை சீரழிக்கும் சாதிய- மதவாத அழுக்கு! (புருஜோத்தமன் தங்கமயில்)

அனைவருக்கும் மற்றுமொரு தேர்தல் வருட வாழ்த்துக்கள். ஆம், இன்று பிறந்திருக்கும் 2020, பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் என இரண்டு தேர்தல்களுக்கான ஆண்டாக இருக்கப்போகின்றது. மக்களின் அத்தியாவசிய தேவைகள், நாட்டின் சமாதானம், சௌபாக்யம் குறித்தெல்லாம் அக்கறை கொள்வதற்கான வாய்ப்புக்களை சூடுபிடிக்கப்போகும் தேர்தல்களுக்கான களம் அனுமதிக்கப் போவதில்லை. ஊடகங்கள் தொடங்கி அனைத்து பொதுத் தொடர்பு சாதனங்களும் தேர்தல்களைப் பற்றியே பேசப்போகின்றன. 

Read more: புதிய ஆண்டில் ராஜபக்ஷக்களை எதிர்கொள்தல்! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது இல்லை. கடந்த பொதுத் தேர்தலிலும், அதற்கு முன்னருங்கூட எழுந்த கோரிக்கைதான். ஆனால், இம்முறை கூட்டமைப்பும், தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஆரம்பக் கட்டப் பேச்சுகளை நடத்துமளவுக்குச் சென்றிருக்கின்றன. இதனை, மனோ கணேசன் ஊடகங்களிடம் வெளிப்படுத்தி இருக்கிறார். 

Read more: மனோவின் முடிவு என்ன? கொழும்பில் களமிறங்குமா கூட்டமைப்பு?! (புருஜோத்தமன் தங்கமயில்)

கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு ஒருசில வாரங்களுக்கு முன்னர், தமிழ்ப் பரப்பில் தொடர்ச்சியாக எழுதி வரும் சிரேஷ்ட அரசியல் பத்தியாளர்கள் சிலர், யாழ்ப்பாணத்தில் கூடி ஆராய்ந்தார்கள். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தங்களுக்குள் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு, அதை நோக்கிய கருத்துருவாக்கத்தை செய்வதே, அந்த ஒன்றுகூடலின் நோக்கமாக இருந்தது. 

Read more: தமிழர் அரசியலில் ‘கருத்து’ உருவாக்கிகளின் வகிபாகம்! (புருஜோத்தமன் தங்கமயில்)

நாட்டில் இப்பொழுது பாதுகாப்புச் செயலர் உண்டு. ஒரு பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் உண்டு. ஆனால் பாதுகாப்பு அமைச்சர் இல்லை. ஒரு பாதுகாப்பு அமைச்சரை ஏன் நியமிக்க முடியவில்லை? ஏனென்றால் 19வது திருத்தத்தின்படி ஜனாதிபதி அவ்வாறான அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது. எனவே தனக்கு நம்பிக்கையான ஒருவரை ராஜாங்க அமைச்சராக நியமித்து விட்டு மற்றொருவரை அந்த அமைச்சின் செயலாளராக நியமித்து விட்டு மறைமுகமாக அந்த அமைச்சை புதிய ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். 

Read more: ஒரு பொதுத் தேர்தலை முன்னிட்டு ஜ.நா. தீர்மானத்தை எதிர்த்தல்! (நிலாந்தன்)

ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் வடக்கு மாகாண ஆளுநராக சந்திரசிறி இருந்த காலகட்டத்தில் யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு படைப்பாளியும் புலமையாளரும் ஆகிய எனது நண்பர் கைபேசியில் என்னை அழைத்தார். யாழ். புகையிரத நிலையத்தில் ஒரு சுவிட்சலாந்து பெண் ஓவியம் வரைகிறார், வருகிறீர்களா போய் பாப்போம் என்று கேட்டார். 

Read more: யாழ்ப்பாணத்துக்கு நிறந்தீட்டுதல்: யாரால்? யாருக்கு? யாருக்காக?! (நிலாந்தன்)

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்