“…நாங்கள் தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்துவிட்டதால் மாத்திரம், ஈழத்தமிழர் அரசியலைப் பேசுவதற்கான தகுதியை இழந்துவிட்டோமா, எமக்கான அங்கீகாரத்தையும், பேசுவதற்கான தகுதியையும் பெறுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும். மீண்டும் தாயகத்திற்கு திரும்ப வேண்டுமா…” என்கிற ஆதங்கத்தை இந்தப் பத்தியாளரிடம் அவரின் வயதையொத்த புலம்பெயர் ஊடகத்துறை நண்பரொருவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தினார். கிட்டத்தட்ட அதே மாதிரியான ஆதங்கத்தை சமூக ஊடகமொன்றில் கனடாவில் வசிக்கும் ஈழத்தமிழ்ச் செயற்பாட்டாளர் ஒருவரும் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார். 

Read more: முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரான தாயக- புலம்பெயர் உறவை வலுப்படுத்துவது எப்படி? (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ் மக்கள் ‘முள்ளிவாய்க்கால்’ என்கிற இன அழிப்புக் களத்தைச் சந்தித்து பத்து ஆண்டுகளாகிறது. தேசிய இனமொன்றின் பல தசாப்தகால விடுதலைக்கான கோரிக்கைகளும், அதற்கான அர்ப்பணிப்பும் சர்வதேசத்தினாலும் பௌத்த சிங்களப் பேரினவாதத்தினாலும் கருவறுக்கப்பட்ட களம், முள்ளிவாய்க்கால். தமிழர் செங்குருதியால் நிறைந்திருப்பது முள்ளிவாய்க்கால். நீதிக்கான கோரிக்கை மீண்டும் மீண்டும் எதிரொலிக்கும் களம் முள்ளிவாய்க்கால். இழந்த உறவுகளுக்காக ஒவ்வொரு முறையும் முள்ளிவாய்க்காலில் தீபங்களை ஏற்றும் போது, அதில் இழப்பின் பெரும் வலி மாத்திரமல்ல, விடுதலைக்கான ஓர்மமும் சேர்ந்தே எழுந்திருக்கின்றது. இப்படி முள்ளிவாய்க்காலுக்கு தமிழர்களைப் பொறுத்தளவில் பல பரிணாமங்கள் உண்டு. 

Read more: முள்ளிவாய்க்காலில் செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி! (புருஜோத்தமன் தங்கமயில்)

கரும்புச் சாறு எடுக்கும் இயந்திரத்தில் அகப்பட்ட கரும்பின் நிலையும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தமிழ் மக்களின் நிலையும் ஒன்றுதான். பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால், வாழ்க்கையின் பெரும்பகுதியை வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, சிறைகளில் தொலைத்தவர்களின் கண்ணீர்க் கதைகள் தமிழ் மக்களிடம் ஏராளம் உண்டு. இன்னமும் அந்தக் கதைகள் தொடரவும் செய்கின்றன. கடந்த வெள்ளிக்கிழமை யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் மற்றும் சிற்றுண்டிசாலை உரிமையாளர் ஆகியோரது கைதுகளும் அதனையே உறுதி செய்கின்றன. 

Read more: யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைதும், தமிழர்கள் ஒன்றிணைய வேண்டிய இடமும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் இறுதி மோதல்கள் முடிவுக்கு வந்த நாட்களில், தென் இலங்கை, போர் வெற்றிவாதம் எனும் பெரும் போதையால் தள்ளாடியது. வீதிகளிலும் விகாரைகளிலும் பாற்சோறு பொங்கி பகிர்ந்துண்டு கொண்டாட்டத்தின் எல்லை தாறுமாறாக எகிறியது. ஆனால், அன்றைக்கு தமிழ் மக்களின் மனங்கள் பெருங்கவலையிலும், அலைக்கழிப்பினாலும் நிரம்பியிருந்தது. கொழும்பு உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் தென் இலங்கை நகரங்களில், தமிழர்களை நோக்கி போர் வெற்றிப் போதைக்காரர்களினால் நீட்டப்பட்ட பாற்சோறும், சிவப்பு சம்பலும் பிணங்களையும், அவற்றிலிருந்து வழியும் குருதியை நினைவூட்டின. எந்தவொரு தரப்பிற்கும் அப்படியான நிலையொன்று வரக்கூடாது என்பது, தமிழ் மக்களின் நினைப்பாக இருந்தது. அந்த நினைப்பில் இன்றைக்கும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுவிடவில்லை. 

Read more: இது பாற்சோறு பொங்கி மகிழும் நேரமல்ல! (புருஜோத்தமன் தங்கமயில்)

முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ் மக்கள் எதிர்கொண்டு பத்து ஆண்டுகளாகிறது. ஏழு தசாப்தங்களைத் தாண்டிய தமிழ்த் தேசியப் போராட்ட வரலாற்றில், முதல் மூன்று தசாப்த காலத்தை அஹிம்சை அரசியல் வழியிலும், அடுத்த மூன்று தசாப்த காலத்தை வெற்றிகளும் தோல்விகளும் நிறைந்த ஆயுதப் போராட்டத்தின் வழியேயும் தமிழ் மக்கள் கடந்திருக்கிறார்கள். அதில் சொல்லிக் கொள்ளும் படியான அடைவுகளுக்கான தருணங்கள் தவற விடப்பட்டிருந்தாலும், தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் அதன் நியாயப்பாடுகளை உலகம் உணர்ந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

Read more: முள்ளிவாய்க்கால் பேரவலம்; பத்து ஆண்டுகளை எப்படி எதிர்கொண்டிருக்கிறோம்?! (புருஜோத்தமன் தங்கமயில்)

சமூக வலைத்தளங்களை “பலவீனமானவர்களின் ஆயுதம்” என்று மானுடவியலாளர் ஜேம்ஸ் ஸ்கொட்- James Scott கூறியிருக்கிறார். 1985இல் மலேசிய கிராமங்களில் ஏற்பட்ட விவசாயிகளின் பிரச்சினை பற்றி அவர் எழுதிய நூலில் மேற்கண்டவாறு கூறியிருக்கிறார். 

Read more: ஈஸ்டர் தாக்குதல்களின் பின்னணியில் முகநூலும் இலங்கைத்தீவும்! (நிலாந்தன்)

போர் வெற்றிக்குப் பின் 2009இலிருந்து இலங்கை அரசாங்கம் அனைத்துலக பாதுகாப்புக் கருத்தரங்குகளை கொழும்பில் நடத்தி வருகிறது. மைத்திரிபால சிறிசேன அரசுத் தலைவராகிய பின்னரும் அக்கருத்தரங்கு நடந்தது. அதில் பேசிய அவர் இறுமாப்போடு பின்வருமாறு பிரகடனம் செய்தார் “சிறிலங்காவுக்கு இப்போது எதிரிகள் இல்லை” என்று. ஆனால் அப்படியல்ல சிறிலங்காவுக்கு எதிரிகள் உண்டு என்பதைத்தான் உயிர்த்த ஞாயிறு அன்று வெடித்த குண்டுகள் நிரூபித்திருக்கின்றன. போரில் வெற்றி பெற்ற பின் இனி எதிரிகள் இல்லை என்ற முடிவுக்கு ஏன் மைத்திரி வந்தார்? ஏனெனில் அவர் புலிகள் இயக்கத்தை மட்டும் தான் எதிரிகளாகப் பார்த்தாரா? 

Read more: உயிர்த்த ஞாயிறன்று திறக்கப்பட்ட புதிய போர் முனை?! (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்