யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஓர் அரச சார்பற்ற நிறுவனத்தின் தலைவரும் சமூக செயற்பாட்டாளருமாகிய ஒருவர் யாழ் மாவட்ட கட்டளைத் தளபதியிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார் “ஒரு காலம் எந்த படைத்தரப்பிடமிருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று கோரினோமோ அதே படைத்தரப்பு இப்பொழுது பெண்கள் பயிலும் பாடசாலைகளின் வாயிலில் காவலுக்கு நிற்கிறது” என்று. அதற்கு கட்டளைத் தளபதி சொன்னாராம், “அவர்களைப் பாதுகாப்பதற்காகத்தான் நாங்கள் அங்கே நிற்கிறோம்” என்று. 

Read more: உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள், இந்தியத் தேர்தல் முடிவுகள் என்பவற்றின் பின்னரான தமிழ் அரசியல்! (நிலாந்தன்)

நாட்டில் அரசாங்கம் என்கிற வஸ்து ஒன்று இருக்கிறதா, எனும் கேள்வி கடந்த சில மாதங்களாகவே எழுப்பப்படுகின்றது. ‘நல்லாட்சி, தேசிய அரசாங்கம்’ என்கிற கவர்ச்சி நாமங்களோடு மக்களை நோக்கி வந்தவர்கள், சில வருடங்களுக்குள்ளேயே அரசாங்கம் என்கிற கட்டமைப்பின் அனைத்துப் பாகங்களையும் தீவைத்து எரித்துவிட்டு, அந்தச் சூட்டில் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள். 

Read more: தீ வைத்த மைத்திரியும், எலியாகத் தப்பிக்கும் ரணிலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

பேரினவாத சிந்தனைகளால் சீரழிந்து போயிருக்கிற நாடு, அந்தச் சிந்தனைகளைத் திரும்பத் திரும்ப காவிச் சுமப்பது என்பது, பெரும் அச்சுறுத்தலானது. இலங்கை அப்படியானதொரு கட்டத்திலேயே தொடர்ந்தும் இருந்து வருகின்றது. தென் இலங்கையின் அதிகார பீடங்கள் நினைக்கின்ற அனைத்தையும் காவி தரித்த பிக்குகளை முன்னிறுத்திக் கொண்டு, செய்துவிட முடியும் என்கிற கட்டம், பண்டா- செல்வா ஒப்பந்தக் கிழிப்போடு, அனைத்துச் சிறுபான்மையின மக்களுக்கும் உணர்த்தப்பட்டுவிட்டது. அதன் தொடர்ச்சியையே, தலதா மாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம்(!) நடத்தி, அத்துரலிய ரத்ன தேரரும் நிரூபித்துக் காட்டியிருக்கிறார். 

Read more: அத்துரலிய தேரரின் போராட்டம் அடக்குமுறையின் தொடர்ச்சியே..! (புருஜோத்தமன் தங்கமயில்)

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளரான ஞானசார தேரர், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கடந்த வாரம் விடுதலையானார். மக்கள் போராட்டங்களை நடத்தி சிறை சென்று திரும்பும் தலைவர்களை வரவேற்பதற்கு உண்டான வரவேற்பை ஞானசார தேரருக்கும் வழங்குவதற்காக நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலில் கூடியிருந்தார்கள். அதனை நேரடி ஒளிபரப்புச் செய்வதற்காக தொலைக்காட்சிகள் சிலவும் காத்திருந்தன. 

Read more: ஞானசார தேரரின் விடுதலையும், பேரினவாத அச்சுறுத்தலும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

யாழ்ப்பாணத்தில் புடவைக் கடையில் வேலை செய்யும் ஒரு பெண் உள்ளாடைகள் வாங்குவதற்கு வந்த ஒரு பெண் வாடிக்கையாளரிடம் பின்வருமாறு கூறியிருக்கிறார். “நீங்கள் கேட்கும் உள்ளாடைகள் நமது கடையில் இல்லை அவற்றை மின்சார நிலைய வீதியில் உள்ள ஒரு கடையில் வாங்கலாம் ஆனால் அங்கே நீங்கள் போக வேண்டாம் ஏனென்றால் அந்தக் கடையில் விற்கப்படும் உள்ளாடைகளில் ஒரு வித ரசாயனம் விசிறப்பட்டு இருப்பதாகவும் அது உடலுக்குத் தீங்கானது என்றும் ஒரு தகவல் உண்டு” என்று. அவர் அவ்வாறு குறிப்பிட்ட அந்தக் கடை ஒரு முஸ்லீம் வர்த்தகருக்கு சொந்தமானது. இது ஒரு கட்டுக்கதை. இது முதலாவது. 

Read more: முஸ்லிம் தலைவர்களுக்கு இணக்க அரசியலை விட்டால் வேறு தெரிவு உண்டா?! (நிலாந்தன்)

கழுத்துறை சிறீ தேவானந்தா வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதிப்பதற்கு ஒரு புதிய உத்தி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்படுகிறது. அவ் ஒளிப்படங்களில் கரடியாக வேடமணிந்து ஒரு நபர் குழந்தைகளின் புத்தகப் பைகளை சோதிக்கிறார். இவ்வாறு சோதிப்பதன் மூலம் பாடசாலை வாசலில் தமது புத்தகப் பைகள் சோதிக்கப்படுவதை குறித்து பிள்ளைகளுக்கு எதிர்மறையான ஒரு மனப்பதிவு வரக்கூடாது என்று சிந்திப்பதாக கூறப்படுகிறது. 

Read more: அவசரகாலச் சட்டமும் கரடிப் பொம்மையும்! (நிலாந்தன்)

“எல்லாமே விதிப்படிதான் நடக்கும். எதையுமே நம்மால் மாற்ற இயலாது, என்று சொல்பவர்கள் ரோட்டைக் கடக்கும் போது இருபுறமும் பார்த்து விட்டுக் கடப்பதை நான் பார்த்திருக்கிறேன் – ஸ்டீஃபன் ஹொக்கிங்.” 

Read more: உயிர்த்த ஞாயிறுப் படுகொலைகள்: மத நிறுவனங்களை நோக்கிச் சில கேள்விகள்? (நிலாந்தன்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்