ஒக்டோபர் 26, ஆட்சிக்கவிழ்ப்புச் சதியை உயர்நீதிமன்றம் மைத்திரியினதும், அவரது சட்ட ஆலோசகர்களினதும் முகத்தில் அறைந்து, முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ரணில் மீண்டும் பிரதமராகி இருக்கிறார். 52 நாள்களாக நீடித்த அரசியல் குழப்பம், அரசியல்வாதிகளை மாத்திரமல்ல, ஊடகவியலாளர்களை, நோக்கர்களை, எல்லாவற்றையும் தாண்டி நாட்டு மக்களைப் பெரும் அழுத்தத்துக்குள் தள்ளியிருந்தது. அதனால், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் ரணிலின் பதவியேற்பையும் நாடு பெருமளவுக்குக் கொண்டாடியது. 

Read more: கூட்டமைப்பின் முடிவு; யாரின் தோல்வி?! (புருஜோத்தமன் தங்கமயில்)

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் ஒற்றைச் சிந்தனையோடு, யாழ். மையவாத அரசியல் அரங்கு அண்மைய நாட்களில் இயங்கி வருகிறது. தொடர்ந்தும், தூய்மைவாதம் பேசிவரும் கஜேந்திரகுமாரும், அவரது விசுவாசிகளும் புதிய கூட்டணிக்குள் தம்மை இணைப்பது தொடர்பில் நிபந்தனைகளை விதித்து வருகிறார்கள். இது, கூட்டணியை உருவாக்குவதற்காக உழைக்கும் தமிழ் மக்கள் பேரவைக்கு, நெருக்கடியை வழங்கியிருக்கின்றது. 

Read more: கஜனின் தூய்மைவாதமும் பேரவையின் தவறும்! (புருஜோத்தமன் தங்கமயில்)

“…நாட்டு நடப்பைப் பார்க்கும் போது சலிப்பு வலுகிறது. மைத்திரியும், ரணிலும், மஹிந்தவும் தங்களுக்கிடையில் நிகழ்த்திக் கொண்டிருக்கும் அரசியல் ஆடுபுலி ஆட்டத்தினால் எல்லோரையும் சலிப்படைய வைக்கிறார்கள்…” என்று மனோ கணேசன் கூறியிருக்கிறார். பாராளுமன்றத்துக்குள்ளும், நீதிமன்றத்துக்குள்ளும், பொது வெளியிலும் தொடர்ச்சியாக ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்காக பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ஒருவரே, முடிவின்றித் தொடரும் அரசியல் குழப்பத்தினால் சலிப்படைய ஆரம்பித்துவிட்டார் என்றால், சாதாரண மக்களின் நிலை எப்படியிருக்கும்? 

Read more: சலிப்படைய வைத்துத் தோற்கடிக்கும் மைத்திரி! (புருஜோத்தமன் தங்கமயில்)

வவுனியாவில் இடம்பெற்ற ‘எழுநீ’ விருது வழங்கும் விழாவில் உரை நிகழ்த்திய விக்னேஸ்வரன், சிவசக்தி ஆனந்தனைப் புகழ்ந்து பேசியிருக்கிறார். ரணில்-மைத்திரி அரசாங்கம் கவிழ்க்கப்பட்ட பின் நிகழ்ந்த பேரங்களில் சிவசக்தி ஆனந்தனோடு நிகழ்ந்த உரையாடல் என்று சொல்லப்படும் ஒலிப்பதிவு ஒன்று வெளிவந்தது. இவ்வொலிப்பதிவை முன்வைத்து கஜன் அணி, ஆனந்தன் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளது. ஆனால் அது பகிடியாகக் கதைக்கப்பட்ட ஓர் உரையாடலின் பதிவென்று ஆனந்தன் பின்னர் தெரிவித்திருந்தார். எழுநீ உரையில் விக்னேஸ்வரனும் அதை ஒரு பகிடியாக ஏற்றுக் கொண்டு பேசியிருக்கிறார். இதுவிடயத்தில் விக்னேஸ்வரன் ஈ.பி.ஆர்.எல்.எவ்வை கஜேந்திரக்குமாரின் நோக்குநிலையிலிருந்து பார்க்கவில்லையா? என்ற கேள்வி எழுந்துள்ளது. விக்னேஸ்வரனுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்.இற்கும் இடையே எப்படிப்பட்ட உறவுண்டு? 

Read more: விக்னேஸ்வரனின் கூட்டணி: சமையற்காரர்களுக்குள் சண்டை வந்தால் சாப்பாடு தீயும்?! (நிலாந்தன்)

கடந்த நவம்பர் மாதம் பதினொராம் திகதி யாழ்ப்பாணம் டேவிற் வீதியில் உள்ள கலைக்கோட்ட மண்டபத்தில் ஒரு சிறப்புக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தமிழ் சிவில் சமூக அமையத்தால் ஒழுங்கு செய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களும் தமிழ் மக்களும் என்ற தலைப்பின் கீழ் கருத்துக்கள் பகிரப்பட்டன. 

Read more: பேரவை வேறு தமிழ் மக்கள் கூட்டணி வேறா?! (நிலாந்தன்)

2015 ஜனவரியில் ஜனாதிபதி பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டபோது அரசியலமைப்பின் வாயிலாக தனக்கு கிடைக்கப்பெற்ற முழுமையான நிறைவேற்று அதிகாரங்களை இன்னமும் தான் கொண்டிருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நம்பிக்கொண்டிருக்கிறார் என்று  தெரிகிறது. 

Read more: அதை ஏன் அவர்கள் அவருக்கு சொல்லவில்லை?! (நிஹால் ஜெயவிக்கிரம)

ராஜபக்ஷக்களின் சர்வாதிகாரத்துக்கு எதிராக நாட்டு மக்களினால், ஜனநாயகத்தைக் காப்பதற்காக முன்னிறுத்தப்பட்ட மைத்திரிபால சிறிசேன, இன்றைக்கு ஜனநாயக விரோதியாக, மக்களின் இறைமையைக் கேலிக்குள்ளாக்கிவிட்டு சர்வாதிகாரத்தின் வேர்களைப் பிடித்துக்கொண்டு நிற்கிறார். அவர் ஒரு பெரும் பொய்யராக, ஏமாற்றுக்காரராக, தாழ்வுச் சிக்கலுள்ள ஒருவராக நாளுக்கு நாள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறார். 

Read more: மைத்திரியின் பேயாட்டம்…! (புருஜோத்தமன் தங்கமயில்)

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்