பதிவுகள்
Typography

வெறுப்புணர்வை இணக்கமாக, பொறாமையை பெருந்தன்மையாக,இருண்மையை ஒளியாக,பொய்மையை உண்மையாக,

தீமையை நல்லதாக, போரை அமைதியாக,தோல்வியை வெற்றியாக,குழப்பத்தை தெளிவாக மாற்றுங்கள்.. எனக் கூறும் முத்துலட்சுமி அதற்கு எல்லாவிடங்களிலும் தேவையானது சிறு முயற்சி என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் தன் வலைப்பதிவுக்கு வைத்திருக்கும் பெயர் சிறு முயற்சி.

இவரது வலைப்பதிவின் பெயர் சிறு முயற்சியாக இருந்தாலும், அதன்மூலம் இவர் பதிவு செய்கின்ற விடயங்கள் பெருமுயற்சி என்பதில் சந்தேகமில்லை. புதிய இடங்களைச் சுற்றிப்பார்பது சுகமென்றால், அதனை அழகாகவும் ரசனையாகவும் மற்றவர்களுக்கு சொல்வது மகிழ்ச்சி கலந்த பெருமிதம்.

தொடர்புச் சாதனங்களும், உலக வலையாக்கம் விரிவுபடாதிருந்த காலத்தில், தமிழ் எழுத்துலகில் தனது பயணக்கட்டுரைகள் மூலம் உலகின் பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் அனுபவத்தைக் கொடுத்தவர் எழுத்தாளர் மணியன். இன்று அந்தச் சூழ்நிலை மாறி, பலரும் பலதும் தெரிந்திருக்கக் கூடிய சூழலிலும், அதேவிதமான ரசனைச்சுவையைத் தனது எழுத்துகளால் வலைப்பதிவில் பதிவு செய்யும் முத்துலெட்சுமியின் முயற்சியை சிறுமுயற்சி என்றிடலாமா..?

சுற்றுப் பயண அனுபவங்கள் என்றில்லாமல் பல்வேறு அனுபவங்களையும் தனது ரசனையின் நோக்கோடு பதிவு செய்யப்பட்டிருக்கிறது சிறுமுயற்சியில். இவ்வாறு அனுபவங்களை, அறிந்தவைகளை அழகாகப் பதிவு செய்யும் முத்துலெட்சுமி குறித்து பலராலும் அறிந்து கொள்ளப்படாத செய்தி ஒன்று உள்ளது.

4தமிழ்மீடியாவில் முன்பு வாரமொரு வலைப்பதிவு பகுதியிலும், 'ஆனந்தி' சஞ்சிகையில் வலைப்பதிவு பகுதியையும் சிறப்பாகத் தொகுத்தளித்தவர் என்பதை, 4தமிழ்மீடியா 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இவ்வேளையில் பெருமையோடு தெரிவித்து, பல வலைப்பதிவுகளின் பரவலான அறிமுகத்துக்குக் காரணமாக இருந்த அவரது சிறுமுயற்றி வலைப்பதிவினை இந்தப் பகுதியில் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.

அவரா..இவர் என ஆச்சரியப்படுகின்றீர்களா?.. சிறுமுயற்சி எனும் அவரது பெருமுயற்சி பற்றி நீங்கள் அறிந்து சொல்ல அழுத்துங்கள்

முக்கியகுறிப்பு: இந்தப்பகுதியில் தினமும் ஒரு வலைப்பதிவினை அறிமுகம் செய்து வைப்பதற்கான விருப்பம் எங்களுக்கு இருந்து வருகின்ற போதும் அதனைத் தொடர்சியாகச் செய்து வருவதில் உள்ள சிரமங்களை தவிர்த்திட வாருங்கள் வலைப்பதிவர்களே!

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்