ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பகலில் யாழ். நகருக்குச் சென்றேன். அங்கே முகவுறை அணியாமல் நகருக்குள் வருவோர் கைது செய்யப்படுவார்கள் என்ற தொனிப்பட போலீசார் அறிவித்துக் கொண்டு சென்றார்கள். கிட்டத்தட்ட இதே காலப்பகுதியில் ஓராண்டுக்கு முன் நாட்டில் முகத்தை மூடி முஸ்லிம் பெண்கள் முக்காடு இடுவது குற்றமாக கருதப்பட்டது. முக்காடு மட்டுமில்லை மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்கள் அணியும் தலைக் கவசங்களும் சோதிக்கப்பட்டன. முற்றாக முகத்தை மறைக்கும் தலைக்கவசங்கள் தடை செய்யப்பட்டன. அல்லது முகக் கவசங்களில் கருப்புநிற கண்ணாடி இருந்தால் அது தடுக்கப்பட்டது. கார்களில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தால் அதுவும் தடுக்கப்பட்டது. இவ்வளவும் சரியாக ஓராண்டுக்கு முன் நடந்தவை. ஆனால் இப்பொழுது அதே படைத்தரப்பு சொல்கிறது பொது இடங்களில் முகமூடி அணிந்து கொண்டு வராவிட்டால் கைது செய்யப்படுவீர்கள் என்று. 

Read more: கொரோனா வைரசும் ஒரு போதகரும்! (நிலாந்தன்)

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக நாடு முற்றாக முடக்கப்பட்டிருக்கின்றது. நாடு பூராவும் அமுலில் உள்ள ஊரடங்குச் சட்டம், இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை சில மணித்தியாலங்களுக்கு மாத்திரம் தளர்த்தப்படுகின்றது. அதுவும், உணவுப்பொருட்கள் கொள்வனவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கிலானது. இவ்வாறான நிலை இன்னும் சில வாரங்களுக்கு தொடரும் என்று தெரிகிறது. 

Read more: கொரோனாவுக்கு எதிராக கை கோர்ப்போம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கவீந்திரன் கோடீஸ்வரன், அவர் சார்ந்திருந்த தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தை (ரெலோ) விட்டு, சொல்லாமல் கொள்ளாமல் தமிழரசுக் கட்சியில் இணைந்திருக்கிறார். அவர் இம்முறை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறார். அம்பாறை மாவட்ட வேட்பாளர் பட்டியலை இறுதி செய்யும் கூட்டத்தின் போதே, இந்த விடயம் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுக்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவால் சொல்லப்பட்டிருக்கின்றது. 

Read more: அரசியல் அறம் மறந்த மாவை! (புருஜோத்தமன் தங்கமயில்)

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் கடந்த இரு வாரங்களாக, தமிழரசுக் கட்சிக்குள் இடம்பெற்றுவரும் வேட்பாளர் நியமனத்துக்கான இழுபறியும், குத்து வெட்டுக்களுமே முதன்மைக் கவனத்தைப் பெற்றிருக்கின்றன. தம்முடைய வெற்றிக்கு அச்சுறுத்தலானவர்கள் என்று கருதும் நபர்களை ஓரங்கட்டுவது முதல், ஆளுமையுள்ள புதியவர்களை வேட்பாளர் பட்டியலுக்குள் உள்வாங்குவதைத் தவிர்ப்பது வரை மிகமிக கொச்சையான நடவடிக்கைகளில், தமிழரசுக் கட்சியின் தலைவரும், அந்தக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். 

Read more: தமிழரசுக் கட்சியின் தேர்தல் கால குத்து வெட்டுக்கள்! (புருஜோத்தமன் தங்கமயில்)

ரஜினியின் அரசியல் நிலவரம் குறித்துப் பேசும் இக்கட்டுரை, சிஸ்டம் சரியில்ல… அதை சீர் செய்யாமல் ஓய மாட்டேன் என்று கிளம்பியிருக்கும் ரஜினி, நிஜமாகவே சிஸ்டம் மேக்கரா? எனக் கேள்வியெழுப்புகிறது, அதற்கான பதிலையும் தனது பார்வையில் தருகின்றார் கட்டுரையாளரும், எமது சினிமாப்பகுதிக்கான செய்தியாளருமாகிய  ஆர்.எஸ்.அந்தணன். அவருக்கான நன்றிகளுடன் 4தமிழ்மீடியா வாசகர்களுக்காக இங்கே மீள் பதிவு செய்கின்றோம். - 4தமிழ்மீடியாகுழுமம்

Read more: இப்பவும் இல்ல! இனி எப்பவும் இல்ல !

சீன மரபு ஓவியங்களில் வரும் நிலக்காட்சிகளில் ஒரு முக்கியமான அம்சம் உண்டு. அங்கே இயற்கை பிரம்மாண்டமாகக் காட்டப்படும். அப்பேரியற்கைக்கு முன் மனிதன் மிகச் சிறியவனாக வரையப்பட்டிருப்பான். அவன் கட்டிய வீடுகள் அவனுடைய தயாரிப்புக்கள் யாவும் பேரியற்கைக்கு முன் மிகச் சிறியவைகளாகக் காணப்படும். சீன மரபு ஓவியங்கள் சீனாவின் மகத்தான தத்துவ ஞானமாகிய தாவோயிஸத்தின் வழி வந்தவை என்று நம்பப்படுகிறது. அங்கே வெளியை பிரம்மாண்டமாக காட்டுவதற்காக மனிதன் மிகச் சிறியவனாக காட்டப்படுகிறான். இயற்கைக்கு முன் மனிதன் அற்பமானவன் என்ற உணர்வை அந்த ஓவியங்கள் தரும். 

Read more: தமிழர்களும் கொரோனோ வைரசும்! (நிலாந்தன்)

கட்டுரையாளா எஸ். ஆர்.பிரபு தரமான பல படங்களைத் தயாரித்துள்ள ‘டிரீம் வாரியர் பிக்சர்ஸ்’ பட நிறுவன அதிபர். கடந்த தீபாவளிக்கு வெளியாகி வெற்றிபெற்ற ‘கைதி’ படத்தின் தயாரிப்பாளர். நீங்கள் ஒரு சினிமா நேயர் என்றால், சினிமா நிஜம் பேசும் அவரது இந்தக் கட்டுரை நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு சிலருக்காவது பலன் தரும்.  கட்டுரையாளருக்கான நன்றிகளுடன் இங்கே பதிவு செய்கின்றோம் - 4தமிழ்மீடியா குழுமம்.

Read more: இதுதான் கோலிவுட்! - எஸ். ஆர். பிரபு

More Articles ...

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்