பேஸ்புக்கில் தமிழ்க் கவிஞர்கள்
- Monday, 27 August 2012 15:46

திருடனொருவனை
காட்டிக் கொடுத்த
அடுத்த வீட்டுத்
திருட்டுப் பூனைக்கு
அதற்குப் பிறகும்
அதே பெயர்தான்!
-----
"மின்சாரத் தூண்டில்
மீன்கள் துடிக்கின்றன
அணுமின்நிலையம்"
-----
முள்குத்திய இடத்தில்
உடனே பூத்துவிட்டது
இரத்தரோஜா.
-----
சுதந்திரதின வாழ்த்துக்கள் ..!!
எங்கள் தேசத்திற்கு
சுதந்திரம் வாங்குவதற்காக
பலபேர்
செத்து போனார்கள் .!
சுதந்திரம் வந்த பிறகு
தேசமே
செத்துக் கொண்டிருக்கிறது
என அழகான குறுங்கவிகளுடன் நீண்டு செல்கிறது தமிழ்க் கவிஞர்கள் பேஸ்புக் குழு. வளர்ந்து வரும் நவீன தமிழ் கவிஞர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது படைப்புக்கள், கருத்துக்களையும் இங்கு இடம்பெறச்செய்கிறார்கள். படைப்புக்கள் மட்டுமின்றி கவிதையுடன் தொடர்புடைய பொது நிகழ்ச்சிகள், கலந்துரையாடல்கள் குறித்த அறிவிப்புக்களை இங்கு பகிர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு Open Group என்பதால் தோழமைகள் முன்வந்து இந்தப்பக்கத்தை விரிவு செய்யலாம் எனும் கோரிக்கையோடு 500க்கு மேற்பட்ட குழு நண்பர்களுடன் சுவாரஷ்யமான குறுங் கவிகளை கொண்டு காட்சி அளிக்கிறது.
குற்றாலத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நடைபெறவுள்ள தமிழ்க்கவிஞர்கள் ஒன்று கூடும் நிகழ்வுக்கு லீனா மணிமேகலை என்பவர் இந்த பேஸ்புக்குழுவின் ஊடாக அழைப்பு விட்டதும், ஏராளமானோர் கலந்து கொள்ள சம்மதித்திருக்கிறார்கள்.
'100 - 150 பங்கேற்பாளர்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சூழ்நிலை மாறி, இப்போதிருக்கும் உற்சாக சூழ்நிலையில்(மெயில், தொலைபேசி, பேஸ்புக் மூலம் வந்த ரெஸ்பான்ஸை வைத்து) 500 பங்கேற்பாளர்களாவது கொண்ட மாநாடாகத் தான் நடத்த முடியும் போலிருக்கிறது...' என பூரிக்கிறார் அவர்.
தமிழ்க் கவிஞர்கள் பேஸ்புக் குழுவினரை பார்வையிட

.jpg)