நேற்று பிரான்ஸில் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலிலும் இம்மானுவேல் மெக்ரோனின் புதிய அரசியல் கட்சி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது.

Read more: பிரான்ஸ் பாராளுமன்றத் தேர்தலிலும் மெக்ரோன் கட்சி பெரும்பான்மை வெற்றி

இன்று வடக்கு லண்டனின் பள்ளிவாசல் ஒன்றிலிருந்து ரமழான் தொழுகை முடித்துவிட்டு வெளியில் பாதசாரி கடவையில் வந்து கொண்டிருந்த முஸ்லீம்கள் மீது கண்மூடித்தனமாக வாகனம் ஒன்றில் வந்து நபர் ஒருவர் மோதியதில், ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளனர்.

Read more: லண்டனில் பள்ளிவாசல் அருமே முஸ்லீம்கள் மீது தாக்குதல் : ஒருவர் பலி

லண்டனின் கிரீன்ஃபெல் டவர் அடுக்கு மாடி வீடு குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு வீதம் 60 வரை உயர வாய்ப்பு இருப்பதாக தீயணைப்பு படையினர் கவலை வெளியிட்டுள்ளனர். உயிரிழந்த பலர் முற்றுமுழுதாக தீக்கு இரையாகியுள்ளதால் அடையாளங்காணப்பட முடியாத நிலையில் உள்ளனர்.

Read more: லண்டன் அடுக்கு மாடி வீடு குடியிருப்பில் பாரிய தீ : 30 பேர் பலி

ஜேர்மனியின் பவேரியா மாகாணத் தலைநகர் மூனிச்சில் உள்ள புறநகர் ரயில் நிலையம் ஒன்றின் அருகே இன்று செவ்வாய்க்கிழமை நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு பெண் போலிசார் உட்பட 4 பேருக்குப் படுகாயம் ஏற்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. குறித்த ரயில்வே நிலையத்தின் சுரங்கப் பாதையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

Read more: ஜேர்மனியின் மூனிச் நகர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பலர் படுகாயம்

 

அமெரிக்காவிலிருந்து வடகொரியாவுக்கு சுற்றுலாவுக்கு சென்ற 21 வயது மாணவர் ஒட்டோ வர்ம்பியெர்  கோமா நிலையில் மீண்டும் அமெரிக்காவுக்கு திருப்பியனுப்பப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read more: வடகொரியாவில் தடுத்துவைக்கப்பட்டு கோமாநிலையில் அமெரிக்கா திரும்பிய சுற்றுலா மாணவர்

 

ரஷ்யாவின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அலெக்ஸி நாவன்லி அண்மையில் கைது செய்யப் பட்டு 30 நாட்களாக சிறை வாசம் அனுபவித்து வருகின்றார்.  இவரை விடுவிக்குமாறு கோரி இவருக்கு ஆதரவாக ரஷ்யாவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் நாடு முழுவதும் இருந்து பங்கேற்ற சுமார் 1500 பேர் கைது செய்யப்  பட்டுள்ளனர்.

Read more: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் நாவன்லி கைது எதிரொலி! : ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக் கணக்கானவர்கள் கைது

கடந்த சில நாட்களாக பங்களாதேஷில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி அங்கு குறைந்த பட்சம் 77 பொது மக்கள் கொல்லப் பட்டிருக்கலாம் எனவும் இதில் பலர் நிலத்தில்  புதையுண்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.

Read more: பங்களாதேஷில் கனமழை நிலச்சரிவுக்கு 77 பேர் பலி! : துருக்கி நிலநடுக்கத்துக்கு ஒருவர் பலி

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்