கடந்த புதன்கிழமை தெற்கு அட்லாண்டிக் கடலில் 44 குழு உறுப்பினர்களுடன் சென்ற ஆர்ஜெண்டினாவின் நீர்மூழ்கிக் கப்பல் மாயமாகி உள்ளது.

கடந்த வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் 2018 ஆம் ஆண்டுக்கான இராணுவத்துக்கான அதாவது பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடாக $700 பில்லியன் டாலர்கள் பில் அனுமதிக்கப் பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கொள்கை அடிப்படையில் இன்னமும் பாரிய அதே நேரம் வலிமையான இராணுவமாக அமெரிக்க இராணுவத்தைக் கட்டமைப்பதற்கான அழைப்புக்கு ஏற்ற விதத்தில் இந்த நிதி ஒதுக்கீடு அமைந்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் அண்மையில் நடந்து முடிந்த ஒரு பாலின திருமணங்களை சட்ட பூர்வமாக்குவது தொடர்பிலான தபால் மூலமான வாக்கெடுப்பில் 61.6% வீதமானவர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதனால் இக்கருத்துக் கணிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக மாறியுள்ளது.

சிம்பாப்வேயில் வன்முறையற்ற முறையில் அந்நாட்டு இராணுவம் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதுடன் கடந்த 37 வருடங்களாகத் தன்னிகரற்ற தலைவராக விளங்கிய 93 வயதாகும் ராபர்ட் முகாபே இனையும் அவரது துணைவியாரையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளது. மேலும் அந்நாட்டு அதிபர் முகாபே பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

 

எற்கனவே இவ்வருடம் செப்டம்பர் 23 ஆம் திகதி நிபுரு அல்லது Planet x என்ற விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப் படாத ஒரு கோள் பூமியுடன் மோதி பெரும் அழிவு ஏற்படும் என மும்மொழியப் பட்டிருந்தது. இது அதிக ஊடகக் கவனம் பெற்றிருந்த போதும் இந்த நிபுரு கோள் உள்ளது என்பதற்கு விஞ்ஞான ஆதாரம் இல்லை என நாசா தெரிவித்து பொது மக்கள் மத்தியில் வதந்தியும் அச்சமும் பரவாது இருப்பதை உறுதி செய்தது.

இதுவரை காலம் யோகாவை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி வந்த சவுதி அரேபியா தற்போது அதனை விளையாட்டின் ஒரு பகுதியாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை உறுதி செய்த சவுதியின் வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சு அதிகாரிகள் இது தொடர்பில் சவுதி அரசிடம் இருந்து உரிமம் பெறப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

 

விண்வெளியில் பூமியைச் சுற்றி வரும் ஆய்வு மையமான டியாங்காங் என்ற சீன செய்மதி செயலிழந்துள்ளது. இது தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துடனான தொடர்பை இழந்துள்ளதால் எதிர்வரும் ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப் பகுதியில் பூமியுடன் மோதும் எனக் கணிக்கப் பட்டுள்ளது.

More Articles ...

Most Read