தன் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப் பட்டதை அடுத்து பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சர் மைக்கேல் ஃபாலன் நேற்று வியாழக்கிழமை தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ISIS இன் கடைசி முக்கிய நகரான டேய்ர் எல் ஸோர் ஐக் கைப்பற்றியுள்ளதாக சிரிய படைகள் அறிவிப்பு
கிழக்கு சிரியாவில் யூப்பிரட்டீஸ் நதிக்கரையோரத்தில் அமைந்துள்ள ISIS இன் கடைசி முக்கிய நகரான டேய்ர் எல் ஸோரினைப் பல மாத கடும் முற்றுகைப் போருக்குப் பின்னர் கைப்பற்றி இருப்பதாக சிரிய படைகள் அறிவித்துள்ளன. சிரியாவில் ISIS இன் பிடியிலுள்ள நகரங்களைக் கைப்பற்ற குர்துப் படைகளின் ஆதரவுடனும் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச வான் படைகளின் ஆதரவுடனும் சிரிய அரச இராணுவம் தொடர்ச்சியாகப் பல வருடங்களாகப் போரில் ஈடுபட்டு வருகின்றது.
வயதாவதை கணித ரீதியாகவும் தவிர்க்க முடியாதாம்! : புதிய ஆய்வில் தகவல்
நமது பூமியில் வசிக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் தவிர்க்க முடியாத இரு இயல்புகளில் ஒன்று வயதாதல் மற்றும் மரணம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் உயிரியல் ரீதியிலான ஆய்வுகள் மூலம் நாம் வயதாவதைத் தடுப்பதற்கோ அல்லது மெதுவாக்குவதற்கோ வாய்ப்பு உள்ளது என அண்மைக் காலமாக விஞ்ஞானிகள் நம்பி வந்தனர்.
வடகொரியா அணுப் பரிசோதனை மைய சுரங்க விபத்தில் 200 பேர் வரை பலி
வடகொரியாவில் கடந்த மாதம் ஹைட்ரஜன் அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தப் பட்ட பியாங்யாங் அணுவாயுத சோதனை மையத்தில் கட்டப் பட்டு வந்த சுரங்கம் இடிந்து கடந்த மாதம் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 200 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஜப்பானின் அஷாகி என்ற தொலைக் காட்சி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் : உச்சக் கட்டப் பாதுகாப்பு!
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 5 ஆம் திகதி ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகை அளிக்கவுள்ளார். முதற்கட்டமாக அவரின் அரசியல் ஆலோசகரும் மகளுமான இவாங்கா டிரம்ப் இன்று வெள்ளிக்கிழமை டோக்கியோவை வந்தடைந்துள்ளார். டிரம்பின் வருகையை ஒட்டி டோக்கியோ நகரம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குக் கீழ் கொண்டு வரப் பட்டுள்ளது.
பிரம்மபுத்ரா நதி நீரை சுரண்ட 1000 Km நீளமான சுரங்கம் அமைக்கவில்லை! : சீனா
இந்தியா மற்றும் சீன எல்லையூடாகப் பாய்ந்து செல்லும் பிரம்மாபுத்ரா நதிக்குக் குறுக்கே உலகின் மிக நீளமான 1000 km தூரம் கொண்ட சுரங்கப் பாதையை அமைக்கும் திட்டமானது அந்நதி நீரைச் சுரண்டுவதற்காக அல்ல என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹொங்கொங்கில் இருந்து வெளியாகும் தென் சீனாவின் காலைப் பத்திரிகையில் வெளியான செய்தியில் கிட்டத்தட்ட 1000 இற்கும் அதிகமான சீனப் பொறியியலாளர்கள் இணைந்து இந்த சுரங்கப் பாதையை அமைப்பதற்கான தொழிநுட்பங்கள் குறித்து பரிசோதித்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் உடைந்தால் சில தினங்களுக்குள் யுரேனியம் அணுகுண்டு தயாரிப்போம்! : ஈரான்
2015 ஆம் ஆண்டு அமெரிக்காவுடனும் சர்வதேசத்துடனும் ஈரான் மேற்கொண்டிருந்த அணு ஒப்பந்தம் உடைந்தால் 4 நாட்களுக்குள் எம்மால் யுரேனியத்தால் ஆன அணுவாயுதங்களைத் தயார் செய்ய முடியும் என ஈரானின் அணு சக்தி நிறுவனத் தலைமை அதிகாரி அலி அக்பர் சலேஹி எச்சரிக்கை விடுத்துள்ளார்.