வியாழக்கிழமை யேமெனை நோக்கி புறப்பட்ட அகதிகள் படகில் இருந்து ஆள்கடத்தல் பேர் வழிகளால் 180 பேர் வலுக்கட்டாயமாக யேமென் கடலில் வீசப்பட்டதில் 5 பேர் பலியானதுடன் 50 பேர் காணாமற் போயுள்ளதாக இடப்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

Read more: யேமென் கடலில் தூக்கி எறியப் பட்ட அகதிகள்! : 5 பேர் பலி, 50 பேர் மாயம்

செவ்வாய் இரவு சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைத் தாக்கிய 7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கத்தின் விளைவுகள் குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை 25 பேர் இதில் பலியாகி உள்ளனர்.

Read more: சீன நிலநடுக்கத்தின் எதிரொலி! : 25 பேர் பலி, 50 000 சுற்றுலாப் பயணிகள் வெளியேற்றம்

கென்யாவில் இன்று செவ்வாய்க்கிழமை மிகவும் விறுவிறுப்பாக அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெற்று வருகின்றது. இதில் ஏராளமான பொது மக்கள் மிகவும் உற்சாகத்துடன் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர். தேர்தல் அமைதியாகவும் சுமுகமாகவும் நடைபெற ஆயுதம் ஏந்திய போலிசார் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் காவலுக்கு நிறுத்தப் பட்டுள்ளனர்.

Read more: கென்யாவில் அதிபர் தேர்தலில் ஏராளமான பொது மக்கள் வாக்களிப்பு

இன்று ஆகஸ்ட் 2 ஆம் திகதி புதன் கிழமை பூமி மிகை உபயோகத் தினமாகும். (Earth Overshoot Day) அதாவது ஒவ்வொரு வருடமும் பூமியில் உள்ள வளங்களை அந்த வருடத்துக்கு உபயோகிக்கக் கூடிய அளவுக்கு மேல் அதிகமாக உபயோகிக்கும் போது அந்த மிகை உபயோகம் தாண்டும் தினம் ஒவ்வொரு வருடமும் பூமி மிகை உபயோகத் தினமாக அனுட்டிக்கப் படுகின்றது.

Read more: நாம் ஒவ்வொருவரும் அமெரிக்கர்கள் போல் வாழ்ந்தால் எமக்கு 5 பூமிகள் தேவைப்படும்! : கருத்துக் கணிப்பு

இன்று செவ்வாய்க்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பின் மூலம் ஈரான் பாராளுமன்றத்துக்குத் தனது புதிய கேபினேட்டை முன் வைத்தார் அந்நாட்டு  அதிபர் ஹஸன் றௌஹானி. உலக சக்திகளுடன் டெஹ்ரானின் அணுசக்தி தேவைக்கு ஏற்ற விதத்தில் பிரதான அணுசக்தி வடிவமைப்பாளருக்கு முதன்மை ஸ்தானம் அளிக்கப் பட்டுள்ளது.

Read more: ஈரான் பாராளுமன்றத்துக்கு புதிய அமைச்சர்களை நியமித்தார் அதிபர் ஹஸன் றௌஹானி

சீனாவின் தென்மேற்கே சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கிராமப் பாங்கான ஒரு பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மாலை 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு  மையமான USGS தெரிவித்துள்ளது. இந்த பூகம்பத்தால் மோசமான உயிரிழப்புக்களோ அல்லது  கடுமையான சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல் இல்லை.

Read more: சீனாவின்  சிச்சுவான் மாகாணத்தில் 6.5 ரிக்டர் அளவுடைய வலிமையான நிலநடுக்கம்

சொத்துக் குவிப்பு வழக்கில் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து புதிய பிரதமராகப் பதவியேற்ற ஷஹீட் கக்கான் அப்பாஸி இன்று புதன்கிழமை நவாஸ் ஷெரீஃபை சந்தித்துப் பேசியுள்ளார்.

Read more: பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷஹீட் கக்கான் முன்னால் பிரதமரை சந்தித்தார்!

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்