சிரியாவில் கடந்த 3 வாரங்களில் அலெப்போவில் இருந்து  37 500 பொது மக்கள் வெளியேற்றப் பட்டிருப்பதாகவும் புதன்கிழமையுடன் அனைத்து வெளியேற்றமும் நிறைவு செய்யப்  படும் எனவும் துருக்கி வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசொக்லு செவ்வாய்க்கிழமை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

திங்கட்கிழமை மாலை சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் அமைந்துள்ள மசூதி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி மூன்று பேர் படுகாயம் அடையக் காரணமாக விளங்கிய மர்ம நபர் தன்னைத் தானே சுட்டுக் கொன்ற நிலையில் கண்டு பிடிக்கப் பட்டுள்ளதாக சுவிஸ் போலிசார் இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளனர்.

துருக்கியின் ரஷ்ய தூதுவர் ஆண்றோ கார்லோஃப் நேற்று கலைக்கூட நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றிரவு ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில்  கிரிஸ்துமஸ் புறநகர் சந்தைப் பகுதி ஒன்றில் டிரக் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸில் நடத்தப்பட்டது போன்று இதுவும் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதலா என பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த டிரக் வாகனத்தின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

2016ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டிகளில் போர்ட்டாரிகோவை சேர்ந்த ஸ்டெபானி டெல் வாலே எனும் 19 வயதுப் பெண்மணி பட்டம் வென்றுள்ளார்.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள மசூதியொன்றில் நேற்று திங்கட்கிழமை ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

யேமெனின் தெற்கே உள்ள துறைமுக நகரான ஆடெனில் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இராணுவ முகாம் ஒன்றிட்கு அருகே நிகழ்த்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 48 படையினர் கொல்லப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ள நிலையில் யேமெனைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தேசக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

More Articles ...

Most Read