2016ம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டிகளில் போர்ட்டாரிகோவை சேர்ந்த ஸ்டெபானி டெல் வாலே எனும் 19 வயதுப் பெண்மணி பட்டம் வென்றுள்ளார்.

துருக்கியின் ரஷ்ய தூதுவர் ஆண்றோ கார்லோஃப் நேற்று கலைக்கூட நேரடி ஒளிபரப்பின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

நேற்றிரவு ஜேர்மனியின் தலைநகர் பேர்லினில்  கிரிஸ்துமஸ் புறநகர் சந்தைப் பகுதி ஒன்றில் டிரக் வாகனம் ஒன்று புகுந்து மோதியதில் குறைந்தது 9 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 50 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பிரான்ஸில் நடத்தப்பட்டது போன்று இதுவும் திட்டமிட்ட தீவிரவாத தாக்குதலா என பலத்த சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.  குறித்த டிரக் வாகனத்தின் ஓட்டுனரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கடந்த வியாழக்கிழமை தென் சீனக் கடற் பகுதியில் ஆழ் கடல் ஆராய்ச்சிக்காக அமெரிக்கா பயன்படுத்திய ஆளில்லா டிரோன் விமானத்தை உளவு சாதனம் என்ற சந்தேகத்தின் பேரில் சீனா கைப்பற்றியிருந்தது. இதை அடுத்து அமெரிக்கா மற்றும் சீனா இடையே மறுபடியும் புதிய ஒரு சர்ச்சை உருவாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரிலுள்ள மசூதியொன்றில் நேற்று திங்கட்கிழமை ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

 

யேமெனின் தெற்கே உள்ள துறைமுக நகரான ஆடெனில் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் இராணுவ முகாம் ஒன்றிட்கு அருகே நிகழ்த்திய குண்டுத் தாக்குதலில் குறைந்தது 48 படையினர் கொல்லப் பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அறிவித்துள்ள நிலையில் யேமெனைத் தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாமிய தேசக் குழு இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.

உலக சனத்தொகையில் 3.3% வீதமான மக்கள் தமது சொந்த நாட்டை விட்டு இன்னொரு நாட்டில் இடம்பெயர்ந்து வாழும் சர்வதேச அகதிகள் ஆவர் எனப் புதிய கணிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது.

More Articles ...

Most Read