ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்காவின் 45 ஆவது அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் தான் பதவியேற்று 100 ஆவது நாள் நிறைவை மிக எளிமையாகக் கொண்டாடியதுடன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்குத் தனது அனுபவங்கள் மற்றும் அலுவலகப் பணி குறித்து பேட்டியளித்துள்ளார்.

Read more: பதவியேற்று 100 ஆவது நாள் நிறைவில் பழைய வாழ்வையே விரும்புவதாக டிரம்ப் தெரிவிப்பு

வெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்திலுள்ள கவுரோ நகரத்தில் அமைந்துள்ள இந்து ஆலயங்களின் சிலைகள் உடைக்கப் பட்டுள்ளன. மேலும் அவை கழிவு நீரில் வீசி எறியப் பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பில் மூவர் மீது பாகிஸ்தான் போலிசார் வழக்குப் பதிவு செய்து கைது செய்யத் தேடி வருகின்றனர்.

Read more: பாகிஸ்தானில் இந்து மத ஆலயங்களின் சிலைகள் உடைப்பு

பிரான்ஸின் அடுத்த பிரதமரை தெரிவு செய்யும் முதல் சுற்று வாக்கெடுப்பு நேற்று ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

Read more: பிரான்ஸின் அடுத்த பிரதமர் யார்? : மத்திய மற்றும் தீவிர வலது சாரி வேட்பாளர்கள் முன்னிலையில்!

மேற்கு பசுபிக் கடலில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலுடன் இணைந்து இரு ஜப்பானிய கடற்படைக் கப்பல்கள் இராணுவக் கூட்டுப் பயிற்சியினை ஆரம்பித்ததை அடுத்து நாம் அணுசக்தியால் இயங்கும் அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலை ஒரேயொரு ஏவுகணைத் தாக்குதலில் அழித்துக் கடலில் மூழ்கடிப்போம் என வடகொரியா சூளுரைத்துள்ளது.

Read more: அமெரிக்காவின் விமானம் தாங்கிக் கப்பலைத் தாக்கி அழிக்க நாம் தயார்! : வடகொரியா சூளுரை

பிலிப்பைன்ஸுக்குத் தெற்கே சரான்கனி மாகாணத்தில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு 7.2 ரிக்டர் கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. மிண்டானோ பகுதியை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் தாக்கியதால் பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியாவை ஒட்டிய கடற்கரைப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப் பட்டது.

Read more: பிலிப்பைன்ஸில் 7.2 ரிக்டரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! : சுனாமி எச்சரிக்கை விடுக்கப் பட்டு மீளப் பெறப் பட்டது

ஆப்கானிஸ்தானின் பால்க் மாகாணத்தில் உள்ள இராணுவத் தளம் ஒன்றின் மீது வெள்ளிக்கிழமை இராணுவ வீரர்கள் போன்று உடையணிந்த தலிபான் போராளிகள் சிலர் தொடுத்த மோசமான தாக்குதலில் ஆயுதம் தாங்காத குறைந்தது 140 இராணுவத்தினர் கொல்லப் பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: ஆப்கானில் ஆயுதம் தாங்காத இராணுவத்தினர் மீது தலிபான்கள் மோசமான தாக்குதல்! : 140 பேர் பலி

பிரிட்டன் மகாராணி எலிசபெத் II தனது 91 ஆவது பிறந்த நாளை வெள்ளிக்கிழமை விமரிசையாகக் கொண்டாடி உள்ளார். இதை முன்னிட்டு மத்திய இலண்டனில் பிரிட்டன் இராணுவத்தின் மரியாதை நிமித்தமான குண்டு வேட்புக்களைத் தீர்க்கும் சத்தத்தை மக்கள் அனைவரும் கேட்கக் கூடியதாக இருந்தது.

Read more: தனது 91 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகின்றார் பிரிட்டன் மகாராணி எலிசபெத் II

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்