ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள் என்று யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. 

முன்னதாக paranoid schizophrenic என்ற மனநோய் நிரந்தரமானது அல்ல என்றும் எனவே சட்ட ரீதியாக இம்டாட் அலி என்பவரின் கொலைக் குற்றம் செல்லுபடியாகும் என்றும் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்த பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் இன்று திங்கட்கிழமை  50  வயதாகும் இம்டாட் அலியின் மரணதண்டனையை அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

ஆண்களுக்கு ஏறக்குறைய இணையாக பெண்களும் மது அருந்துகிறார்கள் உலக அளவிலான ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ள 47 நாடுகளில் 14 நாடுகளின் பதவிக் காலம் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. இதனால் புதிய உறுப்பு நாடுகளைத் தேர்வு செய்யும் ரகசிய வாக்கெடுப்பு நியூயோர்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெற்றது.

ஃபேஸ்புக்கில் இஸ்லாம் மதத்துக்கு அவதூறு விளைவிக்கும் கருத்துக்களை வெளியிட்ட காரணத்துக்காக பங்களாதேஷிலுள்ள 15 இந்து ஆலயங்கள் சூறையாடப் பட்டுள்ளன. இச்செயல் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள பங்களாதேஷில் சிறுபான்மையினத்தவாரன இந்துக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஹிலாரி கிளிங்டன் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த போது  அரசாங்கத்துக்கு சொந்தமான ஈ மெயில்களை தனியார் சேர்வர்கள் மூலம் அனுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக இது குறித்து விசாரித்திருந்த FBI இது தொடர்பில் ஹிலாரி மீது வழக்குப்  பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்திருந்தது.

ஜூலை மாதம் துருக்கியில் முறியடிக்கப் பட்ட ஆட்சிக் கவிழ்ப்பை தலைமை தாங்கியதாகக் கருதப் படும் அமெரிக்காவில் வசிக்கும் ஃபெதுல்லா குலென் என்ற மதகுருவுக்கு ஆதரவாக செய்திகள் வெளியிடுகின்றார்கள் என்றும் தீவிரவாத குழுக்கள் சிலவற்றுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டில் கிட்டத்தட்ட 15 ஊடகங்களை துருக்கி அரசு இழுத்து மூடியுள்ளதுடன் மேலதிகமாக 10 000 பொது மக்கள் சேவையாளர்களைப் பதவி நீக்கம் செய்தும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More Articles ...

Most Read