பெல்ஜியத்தில் ஆயுதம் தாங்கிய மர்ம நபர்களின் பிரசன்னத்தை அடுத்து அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேற்றப் பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. பெல்ஜியத்தின் தலைநகர் புருஸ்ஸெல்ஸில் இருந்து 50 Km தெற்கே உள்ள சட்டெலினேயு என்ற கடைக்குள் மர்ம நபர்கள்  சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதை அடுத்தே சனிக்கிழமை காலை உடனடியாக குறித்த அங்காடித் தொகுதியில் இருந்து பொதுமக்கள் போலிசாரால் வெளியேற்றப் பட்டனர்.

ஈராக் கூட்டணிப் படைகளின் மோசுல் முற்றுகையை அடுத்து வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் அங்கு மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி வந்த சுமார் 284 ஆண்களையும் சிறுவர்களையும் ISIS சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றிருப்பதாக ஈராக் புலனாய்வுப் பிரிவு CNN ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளது.

பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுட்டெர்ட்டே தமது நீண்ட கால நட்பு நாடான அமெரிக்காவை விட்டு விலகும் நேரம் வந்து விட்டது என்று அறிவித்துள்ளமைக்கு அமெரிக்கா விளக்கம் கேட்டுள்ள நிலையில் டுட்டெர்டே இந் கருத்து சுதந்திரமானது என்றும் இது பிலிப்பைன்ஸ் மக்களின் மன நிலையையே பிரதிபலிக்கின்றது எனவும் சீனா டுட்டெர்டே இனைப் பாதுகாத்து கருத்து வெளியிட்டுள்ளது.

 பெரு  மற்றும் பொலிவியா ஆகிய நாடுகளின் ஊடாகச் செல்லும் பெரிய நன்னீர் ஏரி மற்றும் அதன் கிளைகளில் இன்றைய உலகில் அருகி வரும் அரிய தவளை இனமான டிட்டிகாக்கா நீர்த் தவளைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நன்னீர் ஏரியின் ஒரு பகுதியான பெருவின் கோட்டா நதி அண்மைக் காலமாக பாரிய அளவில் மாசுபட்டதன் காரணமாக பரிதாபமாக 10 000 இற்கும் அதிகமான தவளைகள் உயிரிழந்து நதியில் மிதப்பதாகக் கூறப்படுகின்றது.

ஹாங்கொங் நகரில் சமீப நாட்களாக தைஃபூன் ஹைமா தாக்கி வருவதால் அங்கு போக்குவரத்தும் பொதுச் சேவையும் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை அங்கு 3 ஆவது அதிகபட்ச மட்டமான வகை 8 புயல் நகரில் பிரகடனப் படுத்தப் பட்டுள்ளது.

திங்கட்கிழமை யேமென் அதிபர் மன்சூர் ஹதி யுத்த நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்தததை அடுத்து  சர்வதேசம் சார்பாக ஐ.நா சபை யேமெனில் 72 மணித்தியாலம் நீடிக்கும் தற்காலிக யுத்த நிறுத்தத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளது. புதன் நள்ளிரவு யேமெனில் அமுலுக்கு வரவுள்ள இந்த யுத்த நிறுத்தத்தின் போது இரு தரப்பும் தமது விரோதத்தைத் தற்காலிகமாக 3 நாட்களுக்குக் கைவிடவுள்ளன.

2012 ஆம் ஆண்டு மத்தியில் இருந்து விக்கிலீக்ஸ் இணையத் தாபகரான ஜூலியன் அசாஞ்சே தென்னமெரிக்க நாடான எக்குவடோரின் இலண்டன் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
அண்மையில் இவரது இணையப் பாவனைக்குத் தீவிர தடைகளை விதித்திருப்பதாக செவ்வாய்க்கிழமை எக்குவடோர் அரசு அறிவித்துள்ளது.

More Articles ...

Most Read