7.8 ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஞாயிறு நள்ளிரவுக்குப் பின்னர் மத்திய நியூசிலாந்தினை மையமாகக் கொண்டு ஏற்பட்டதில் உற்பத்தியான சுனாமிப் பேரலைகள் தெற்கு தீவைச் சேர்ந்த வடகிழக்குக் கரையைத் தாக்கியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையமான USGS தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள லஸ்பெல்லா மாவடத்தில் அமைந்துள்ள தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தமான வழிபாட்டுத் தலத்தின் மீது ISIS போராளிகள் நடாத்திய குண்டு வெடிப்புத் தாக்குதலில் 52 பேர் பலியாகியும் நூற்றுக்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

ஆசியக் கண்டத்தில் முதல் நாடாக ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்கும் முடிவில் தாய்வான் உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெறத் தவறியதால் அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு பெண் அதிபராவார் என்ற வரலாறு மறுபடியும் தகர்ந்து போயுள்ளது.

ஆப்கானிஸ்தானின் மஸார் ஈ ஷெரீஃப் நகரிலுள்ள ஜேர்மன் தூதரகம் மீது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக்கை ஓட்டி வந்து தலிபான்கள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 4 பேர் பலியாகி இருப்பதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சுமா மீது ஊழல் புகார் தொடர்பில் அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அமெரிக்கர்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக தான் பணியாற்றுவேன் என்று 45வது அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

More Articles ...

Most Read