ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்ற கோரிக்கையுடன் சிக்காக்கோவில் நடத்திய தனது இறுதி உரையில் கண்ணீருடன் விடைபெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா.

அமெரிக்க அதிபராக ஜனவரி 20 ஆம் திகதி பதவியேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகர் பதவிக்கு தனது மருமகனான ஜாரேட் குஷ்னெர் என்பவரை திங்கட்கிழமை நியமித்துள்ளார்.

ICBM எனப்படும் கண்டம் விட்டுக் கண்டம் பாயக் கூடிய அதிதிறன் வாய்ந்த ஏவுகணைப் பரிசோதனையை அதிபர் கிம் ஜொங் உன் உத்தரவின் கீழ் எந்த இடத்தில் இருந்தும் எப்போது வேண்டுமானாலும் நிகழ்த்துவோம் என ஞாயிற்றுக் கிழமை வடகொரியா சூளுரைத்துள்ளது.

கடந்த வருடம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா இரகசியமாகச் செயற்பட்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் தொடர்பான ஈ மெயில் சர்ச்சை தகவல்களை விக்கிலீக்ஸ் இணையத் தளத்துக்கு அளித்ததாகவும் இதனால் இறுதிக் கட்டத்தில் ஹிலாரி கிளிங்டன் பின்னடவை சந்தித்து தோற்க நேர்ந்ததுடன் டொனால் டிரம்ப் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ரஷ்யா காய் நகர்த்தி செயற்பட்டிருப்பதாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை ஆப்கானிஸ்தான் பாராளுமன்றம் அருகே  தலிபான்கள் நடத்திய இரட்டைக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் 21 பேர் கொல்லப் பட்டதாகவும் 45 பேர் வரை படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஈரானில் 1989 முதல் 1997 வரை இரு முறை அதிபராகப் பதவி வகித்த 82 வயதாகும் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மாரடைப்பால் ஞாயிற்றுக்கிழமை உயிர் நீத்துள்ளார்.

தெற்கு தாய்லாந்தில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்குக்கு 18 பேர் பலியாகி இருப்பதாகவும் 7 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் தமது வதிவிடங்களை இழந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.

More Articles ...

Most Read