சனிக்கிழமை பாரிஸில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஏர்பிரான்ஸின் ஏர்பஸ் ஏ 380 ரகத்தைச் சேர்ந்த AF66 என்ற விமானம் கிறீன்லாந்து வான்பரப்பின் மீது பறந்து கொண்டிருக்கும் போது அதன் 4 எஞ்சின்களில் ஒன்று பழுதானது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட விமானிகளின் சமயோசிதத்தினால் பழுதான எஞ்சின் விரைந்து நிறுத்தப் பட்டதுடன் ஏனைய 3 எஞ்சின்களின் துணையுடன் சுமார் ஒரு மணிநேரம் பயணித்து கனடாவின் லாப்ரடரில் உள்ள கோஸ் பே விமான நிலையத்தில் பத்திரமாக இறக்கப் பட்டது. 

ஸ்பெயினிலிருந்து தனி நாடு கோரும் கட்டலோனியா பொதுஜன வாக்கெடுப்பில் ஸ்பெயின் காவல்துறை வன்முறையை உபயோகித்ததால் 300 க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 

பப்புவா நியூகினியா தீவை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 6 ரிக்டர் அளவுடைய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

இந்தோனேசியாவின் பிரபல சுற்றுலாத் தீவான பாலியில் அமைந்துள்ள அகுங் என்ற உயிர் எரிமலை உடனடியாக வெடித்துச் சிதறக் கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதால் அங்கிருந்து கிட்டத்தட்ட 50 000 பொது மக்கள் பாதுகாப்பாக தமது இல்லங்களில் இருந்து வெளியேற்றப் பட்டிருப்பதாக இந்தோனேசியாவின் அனர்த்த முகாமை அமைப்பு திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

உலகில் பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ள மக்கள் நடமாட்டம் அற்ற கண்டமான அண்டார்டிகாவில் அண்மைக் காலமாக மனிதனின் செயற்பாடுகளால் ஏற்பட்டு வரும் பூகோள வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் மெல்ல மெல்ல உருகிக் கடல் நீர் மட்டம் ஒவ்வொரு வருடமும் கனிசமான அளவில் உயர்ந்து வருதாக புவியியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இலண்டனில் அமைந்துள்ள டவர் ஹில் என்ற மெட்ரோ சுரங்க ரயில் நிலையத்துக்கு அருகே டியூப் ரயிலில் மர்ம பொருள் ஒன்று வெடித்தில் ஏற்பட்ட பயம் காரணமாக பயணிகள் பதற்றத்துடன் ரயில் நிலையத்தில் இருந்து வெளியேறி உள்ளனர்.

தீவிரவாதிகள் உள்நுழைவதைத் தடுப்பது மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு என்ற போர்வையில் கடந்த சில மாதங்களாக சிரியா, ஈரான், சோமாலியா, யேமென், லிபியா, சூடான், ஈராக் ஆகிய நாடுகளில் இருந்து பொது  மக்கள் அமெரிக்காவுக்கு நுழைய விசா தடை உத்தரவை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிறப்பித்திருந்தார். தற்போது வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைகளால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் வடகொரியா, வெனிசுலா மற்றும் சாத் ஆகிய நாடுகள் இணைக்கப் பட்டுள்ளன.

More Articles ...

Most Read