மத்திய அமெரிக்க நாடுகளை கடந்த சில தினங்களாகத் தாக்கி வரும் நேட் என்ற ஹரிக்கேன் புயலுக்கு இதுவரை 25 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் கட்டடங்களும் வீடுகளும் பலத்த சேதம் அடைந்துள்ளன. விமான சேவை, ரயில் சேவை உட்பட போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது.

இவ்வருடம் 2017 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்பட்டு வரும் சர்வதேச அணுவாயுதப் பரவல் தடை அமைப்பான ICAN இற்கு அறிவிக்கப் பட்டுள்ளது. அண்மைக் காலமாக அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையே அணுவாயுதப் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

 ஃபேஸ்புக் ஸ்தாபகரும் நிறுவனருமான மார்க் ஸுக்கெர்பேர்க் தனது படைப்பான ஃபேஸ்புக்கின் எதிர்மறை விளைவுகளுக்கு பொது மக்கள் மத்தியில் நேரடியாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.

அண்மையில் மத்திய கிழக்கில் சூடு பிடித்துள்ள விவகாரமாக குர்துக்களின் தனி மாநிலத்துக்காக நடத்தப் பட்ட வாக்கெடுப்பும் அதன் பின் சர்வதேசத்தின் மத்தியில் எழுந்துள்ள அழுத்தமும் அமைந்துள்ளன. இதன் ஒரு  கட்டமாக குர்துக்கள் தொடர்ந்து தனி தேசத்துக்காகப் போராடினால் துருக்கி இராணுவம் எப்போது வேண்டுமானாலும் தாக்குவதற்குத் தயார் நிலையில் உள்ளதாக அந்நாட்டு அதிபர் எர்டோகன் எச்சரித்துள்ளார்.

 

பங்களாதேஷில் தங்கியுள்ள ஆயிரக் கணக்கான றோஹிங்கியா அகதிகளை மீளப் பெற மியான்மார் அரசு சம்மதம் தெரிவித்ததை அடுத்து அவர்களை மீளப் பெறுவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் தொடங்கப் பட்டுள்ளன.

அமெரிக்காவில் கேசினோ சூதாட்டங்களுக்குப் பெயர் போன நகரான லாஸ் வெகாஷில் ஞாயிற்றுக் கிழமை இசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் பலியாகியும் 400 பேர் படுகாயம் அடைந்ததும் உலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

சிரிய உள்நாட்டுப் போரில் அதிகபட்சமாக இவ்வருடம் 2017 இல் இதுவரை 3000 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் அதிலும் கடந்த மாதம் செப்டம்பரில் மாத்திரம் 955 பொது மக்கள் கொல்லப் பட்டுள்ளதாகவும் சிரியாவில் இயங்கி வரும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

More Articles ...

Most Read