அண்மைய நாட்களில் தெற்காசியாவைப் பாதித்துள்ள கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் இந்தியா, நேபால் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச்  சேர்ந்த 16 மில்லியன் சிறுவர்கள் மோசமாகப் பாதிக்கப் பட்டுள்ளதாக யுனிசெஃப் (UNICEF) அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இது குறித்து தகவல் அளித்த தெற்காசியாவுக்கான யுனிசெஃபின் பிரதான பிராந்திய இயக்குனர் ஜீன் கோஹ் கூறுகையில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் தமது இல்லங்களையும், பள்ளிகளையும், நண்பர்களையும், அன்புக்குரிய குடும்ப உறவுகளையும் இழந்து தவிப்பதாகத் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சீனாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கான மாநாட்டிற்கான வணிகப் பிரதிநிதிகளிடம் சீன அதிபர் ஜீ ஜின்பிங் பேசிய போது உலக நாடுகள்  பாதுகாப்பு வாதத்தைக் கைவிட்டு அதற்கு எதிராக எழுந்து நிற்க வேண்டும் என்று கருத்துத் தெரிவித்துள்ளார். வடகொரியாவின் இன்றைய 6 ஆவது அணுகுண்டு பரிசோதனையால் கதிகலங்கி நிற்கும் உலகின் 5 பிரதான பொருளாதார சக்திகளுக்கு மத்தியிலும் தனது சந்தைப் படுத்துதல் தடுப்புச் சுவர்களை சீனா தளர்த்த வேண்டும் என அதிகரித்துள்ள அமெரிக்க ஐரோப்பிய அழுத்தங்களுக்கு மத்தியிலும் சீன அதிபர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்காலத்தில் அதிகரித்து வரும் புவி வெப்பத்துக்கும் சூரியனில் இடம்பெற்று வரும் கருத்தாக்கத்துக்கும் தொடர்பில்லை எனவும் இன்றைய சூழலில் அதிகரித்து வரும் புவி வெப்பத்துக்கு மனிதனின் செயற்பாடுகளே அதிகபட்சம் செல்வாக்கு செலுத்துவதாகவும் விஞ்ஞானிகள் குழு ஒன்று தெரிவித்துள்ளது.

ஜப்பான் வான் பரப்பினூடாகப் பயணித்து ஜப்பான் கடலில் விழும் வண்ணம் வடகொரியா இன்று செவ்வாய்க்கிழமை ஏவுகணைப் பரிசோதனையை நிகழ்த்தியிருப்பது சர்வதேசத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை வடகொரியா தனது வரலாற்றில் மிகவும் சக்தி வாய்ந்த அணுகுண்டு பரிசோதனையான ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியுள்ளது. இது உலக அளவில் எதிர்ப்பு அலைகளை அதிகரித்துள்ளதுடன் கண்டனங்களையும் சம்பாதித்துள்ளது. ஐ.நா சபையின் அணுவாயுத கண்காணிப்புப் பிரிவு இது மிகவும் கவலைக்குரிய விடயம் என்றும் ரஷ்யா இது மிகப் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் கருத்துத் தெரிவித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமெரிக்க தூதரகம் அருகே வங்கி ஒன்றின் மீது இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் தொடுக்கப் பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலில் குறைந்தபட்சம் ஐவர் பலியாகி இருப்பதாக ஆப்கான் உட்துறை அமைச்சு செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ஏராளமான ஆயுதங்களுடன் தலிபான் மற்றும் ஜமாத் அல் அஹ்ரார் தீவிரவாத அமைப்புக்களைச் சேர்ந்த 10 போராளிகள் கைது செய்யப் பட்டுள்ளனர்.

More Articles ...

Most Read