அலெப்போவில் பாரிய தாக்குதல் திட்டத்தை முன்னெடுக்கவுள்ள ரஷ்யா அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் வெளியேற வெள்ளிக்கிழமை மாலை வரை கெடு விதித்துள்ளது. மேலும் கிளர்ச்சியாளர்கள் வெளியேறவென இரு சிறப்புப் பாதைகளும் பொது மக்கள் வெளியேறவென 6 பிற பாதைகளும் ஒதுக்கப் பட்டிருப்பதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது. 

ஸ்பெயினின் பாராளுமன்றத்தில் 170 சட்ட வல்லுனர்கள் பங்கேற்ற வாக்கெடுப்பில் 111 இற்கு 68 என்ற வாக்கு வீதத்தில் மரியானோ ராஜோய் வெற்றி பெற்று ஸ்பெயினின் பிரதமராக மீளவும் தெரிவாகியுள்ளார். 2015 டிசம்பரில் ஸ்பெயினில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மைப் பலம் பெறாத நிலையில் அண்மைய பிரதமர் தேர்வின் பின்னரே முழு வீச்சில் இயங்கும் அரசாட்சி ஸ்பெயினில் ஏற்பட்டுள்ளது.

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் வங்கதேசத்தை புயல் தாக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  

ஒவ்வொரு 4.5 நாளுக்கும் ஒரு பத்திரிக்கையாளர் கொல்லப்படுகிறார்கள் என்று யுனெஸ்கோ அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. 

பொதுமக்களுக்காகத் தனது வாழ் நாளை அர்ப்பணித்த ஒரேயொரு அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளிங்டன் தான் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா தெரிவித்துள்ளார். வடக்கு கரோலினாவில் நேற்று பொது மக்கள் மத்தியில் பேசும் போது தற்போதைய சரியான நேரத்துக்கு சரியான வேட்பாளர் ஹிலாரி தான் என அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.

உலக நாடுகளில் மக்கள் மிக அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழும் நாடுகளி்ன் பட்டியலை Global Peace Index வெளியிட்டுள்ளது. 

முன்னதாக paranoid schizophrenic என்ற மனநோய் நிரந்தரமானது அல்ல என்றும் எனவே சட்ட ரீதியாக இம்டாட் அலி என்பவரின் கொலைக் குற்றம் செல்லுபடியாகும் என்றும் அவருக்குத் தூக்குத் தண்டனை விதித்திருந்த பாகிஸ்தானின் சுப்ரீம் கோர்ட் இன்று திங்கட்கிழமை  50  வயதாகும் இம்டாட் அலியின் மரணதண்டனையை அதிரடியாக ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது.

More Articles ...

Most Read