ஸ்பெயினின் தொழில் வளம் மிக்க மாநிலமான கேட்டலோனியாவைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அம்மாநில மக்கள் சில வருடங்களாகவே முன்னெடுத்து வருகின்றனர்.

பனாமா பேப்பர் விவகாரத்தில் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று கைது உத்தரவு பிறப்பித்திருப்பதாக அவரது சட்டத்தரணிகள் தகவல் அளித்துள்ளனர்.

மியான்மாரில் தற்போது முற்றியுள்ள றோஹிங்கியா சிறுபான்மை முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண யதார்த்தமான அணுகுமுறையே அவசியம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

ரஷ்யாவுடனான பனிப்போருக்குப் பின் முதன்முறையாக 24 மணித்தியாலக் கெடுவில் வடகொரியா மீது அமெரிக்கா அணுவாயுதப் பிரயோகம் செய்யும் எச்சரிக்கை விடுக்கப் படுவதற்கான அழுத்தம் மிகவும் அதிகரித்திருப்பதாக மேற்குலக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவுக்கு புறத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் இன்று வியாழக்கிழமை காலை திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் உடல் கருகி 46 பேர் பலியானதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

ஜப்பானில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கின்றார் முன்னால் பிரதமர் சின்ஷோ அபே. தேர்தலில் அவரின் சுதந்திர ஜனநாயகக் கட்சி 465 இடங்களில் 312 இடங்களை சுவீகரித்தது.

கடந்த சில நாட்களாக சிரியப் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் அண்மையில் அரச படைகள் கிழக்கு சிரியாவில் உள்ள அல் ஸோர் மாகாணத்தில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் வயலான அல் ஒமர் இனைக் கைப்பற்றி இருந்தன.

More Articles ...

Most Read