1945 ஆம் ஆண்டு ஐ.நா சபை தாபிக்கப் பட்டதற்குப் பிறகு முன்னெப்போதும் இல்லாதவாறு உலகம் தற்போது மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்து வருவதாக ஐ.நா இன் மனிதாபிமானப் பிரிவு செயலாளர் ஸ்டெஃபென் ஓ பிரியன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரிலுள்ள ஒரு கஃபேயில் மர்ம நபர்கள் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரு அல்பேனியர்கள் கொல்லப் பட்டதாகவும் ஜேர்மனியின் மேற்கு நகரமான டுஸ்ஸெல்டோர்ஃபில் உள்ள ரயில் நிலையம் ஒன்றில் ஒரு நபர் கத்தியால் தாக்கியதில் 9 பேர் காயமடைந்ததாகவும் இன்று வெள்ளிக்கிழமை செய்திகள் வெளியாகியுள்ளன.

தென்கொரிய அதிபர் பார்க் கியுன் ஹேவை பதவி நீக்கம் செய்து அந்நாட்டு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே அதிபரின் தோழி சோய் சூன் சில் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கி அவருடன் தொடர்பு வைத்திருந்த பிரபல சாம் சூங் அலுவலகங்களிலும் சோதனை நடத்தப் பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள மிகப்பெரிய இராணுவ வைத்திய சாலை மீது டாக்டர்கள் போன்று வேடம் அணிந்து ISIS தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 30 இற்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதுடன் 6 மணித்தியாலம் நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் வரை படுகாயம் அடைந்தும் உள்ளனர்.

 

எகிப்தின் 19 ஆம் இராஜ வம்சத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையான ராம்சேஸ் 2 (Ramses II) என்ற மன்னனது மிகப் பழமையான சிதைவடைந்த சிலை ஒன்று எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் தொல்பொருள் ஆய்வாளர்களால் அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

 

அண்மையில் வடகொரிய அதிபர் கிம் ஜொங் உன் இனது சகோதரரான கிம் ஜொங் நம் மலேசிய விமான நிலையத்தில் விஷ இரசாயனம் மூலம் கொல்லப் பட்டார். இது தொடர்பாக மலேசியப் போலிசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருவதுடன் வடகொரியாவைச் சேர்ந்த சில சந்தேக நபர்களையும் விசாரிக்கும் உத்தேசத்தில் உள்ளனர்.

நேற்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அமெரிக்காவில் நிறுவப்பட்ட
சிறுமியின் சிலை தான் தற்போது சமூகவலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

More Articles ...

Most Read