சிரியாவின் கிளர்ச்சிப் படையினரால் முற்றுகையிடப் பட்டுள்ள அலெப்போ நகரை அங்கிருக்கும் பல ஆயிரக் கணக்கான மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படாத வண்ணம் மீட்பதற்கு சிரிய இராணுவம் முயற்சி செய்து வருகையில் சற்று அழுத்தமான இராஜதந்திர பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் இதனால் இன்னும் சில நாட்களுக்குள் அலெப்போவில் மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் ஐ.நா தெரிவித்துள்ளது. 

Read more: சிரியாவின் அலெப்போ பகுதியில் மனிதாபிமான யுத்த நிறுத்தத்துக்கு வாய்ப்பு:ஐ.நா நம்பிக்கை

வறிய ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு பாய்ந்து செல்லும் நைல் நதி பெருக்கெடுத்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 76 பேர் கொல்லப் பட்டுள்ளதாகவும் ஏராளமான வீடுகள் அடித்துச் செல்லப் பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

Read more: கனமழை காரணமாக சூடானைத் துவம்சம் செய்த நைல் நதிப் பெருக்கு

ஜப்பான் கடற்பரப்பின் 250 KM தொலைவில் வடக்குக் கடற்கரைக்கு அண்மையில் ஜப்பானின் முக்கிய வர்த்தக வலயத்தில் தனது ஏவுகணை வந்து வீழுமாறு முதன்முறை  பரிசோதனை செய்துள்ளது வடகொரியா. இதன் காரணமாக கொரிய வலயத்தில் மாத்திரம் அல்லாது ஜப்பான், அமெரிக்கா மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் பகுதிகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 

Read more: ஜப்பான் கடற்பகுதியை நோக்கித் தனது ஏவுகணையை முதன் முறையாக செலுத்தியது வடகொரியா

ஏட்ரியாடிக்-ஈஜியன் (balkan) மூலம் தப்பிக்கும் வழிகள் தடுத்திருக்கும் காரணத்தினால்,  பல அகதிகள்  ஆபத்தான வழிகளால் தமது நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றனர்.  இதனால்  உயிர் இழக்கும் அகதிகளின் எண்ணிக்கை இவ்வாண்டில் பெருமளவில் உயர்ந்திருக்கிறது என ஐ.ஓ.எம் (International Organization for Migration)  பேச்சாளர் ஜோயல் மில்லமண் (Joel Millmann)  தெரிவித்துள்ளார். 

Read more: 2016ல் அகதிகள் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது

நேபாளத்தின்  24 ஆவது பிரதமராக முன்னால் மாவோயிஸ்ட் கிளர்ச்சிக் குழு தலைவர் பிரச்சண்டாவை அந்நாட்டு பராளுமன்றம் தேர்ந்தெடுத்துள்ளது. 

Read more: மாவோயிஸ்ட் தலைவர் பிரச்சண்டா நேபால் பிரதமரானார்

எமிரேட்ஸ் நிறுவனத்தினத்திற்குச் சொந்தமான EK521 வகை விமானம், துபாய் விமான நிலைய ஓடுதளத்தில் விபத்துக்குள்ளாகியது.

Read more: தரையிறங்கையில் விபத்துக்குள்ளாகிய எமிரேட்ஸ் விமானம்

அமெரிக்காவின் மியாமி மாநிலத்தில் 10 பேர் ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டமை கண்டறியப் பட்டுள்ளது. ஏற்கனவே தென்னமெரிக்க நாடுகளை அச்சுறுத்தி வந்த இந்த வைரஸ் அமெரிக்காவிலும் பரவுவது இப்போது கண்டு பிடிக்கப் பட்டுள்ளமையால் உச்சக் கட்ட கண்காணிப்பில் மருத்துவக் குழுக்கள் வைக்கப் பட்டுள்ளன. 

Read more: அமெரிக்காவிலும் வேகமாகப் பரவி வரும் ஜிகா வைரஸ்!:உச்சக் கட்ட கண்காணிப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்