அண்மையில் நேபாலில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலின் பிரகாரம் இன்று ஞாயிறு வரை வெளியான முடிவுகளின் படி மொத்தம் எண்ணப் பட்ட 89 ஆசனங்களில் 72 ஆசனங்களை பெற்று அந்நாட்டின் இடதுசாரிக் கூட்டணிக் கட்சி முன்னிலை வகிக்கின்றது.

சமீப நாட்களாக அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில காட்டுத்தீ ஆனது கடும் சேதத்தை ஏற்படுத்தி வருகின்றது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

ஈராக்கை ISIS தீவிரவாதிகளிடமிருந்து முழுமையாக மீட்டு விட்டதாக ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி அறிவித்துள்ளார். அண்மையில் தான் ISIS பிடியில் இருந்த ஈராக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான மோசுலை அமெரிக்க விமானப் படையின் உதவியுடன் முழுமையாக மீட்டு விட்டதாக ஈராக் தெரிவித்திருந்தது.

பிரிட்டன், சீனா, பிரான்ஸ், துருக்கி, ஜேர்மனி, சவுதி அரேபியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்ப்பை மீறி அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று புதன்கிழமை ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்துள்ளார்.

யேமெனின் சடா என்ற பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை சவுதி தலைமையிலான கூட்டணி படைகள் நடத்திய வான் தாக்குதலில் 23 பொது மக்கள் பலியாகி உள்ளனர். அண்மைக் காலமாக யேமெனின் ஹௌத்தி போராளிகளுக்கு எதிராக சவுதி வளைகுடா கூட்டணி நாடுகள் நடத்தி வரும் வான் தாக்குதலில் சிறுவர்கள் உட்பட பல அப்பாவிப் பொது மக்கள் பலியாகி வருகின்றனர்.

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரகடனப் படுத்தியதை அடுத்து மத்திய கிழக்கு நாடுகள், பல மேற்குலக நாடுகள் உட்பட ஐ.நாவும் தமது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தன. இதனைத் தொடர்ந்து ஐ.நா இற்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹலே இஸ்ரேலுக்கு எதிராக விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வரும் அனைத்து நாடுகளுடனும் சேர்ந்து ஐ,நா  உம் செயற்பட்டு வருகின்றது என்று தெரிவித்துள்ளார்.

இன்று வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

More Articles ...

Most Read