சிரியா நோக்கிச் சென்ற போது அண்மையில் கருங்கடலில் 92 பேருடன் விபத்தில் சிக்கிய ரஷ்ய இராணுவ விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி மிகத் தீவிரமான தேடுதலை அடுத்துக் கண்டு பிடிக்கப் பட்டிருப்பதாக இன்று செவ்வாய்க்கிழமை ரஷ்ய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மாஸ்கோ நேரப்படி இன்று அதிகாலை 5.42 மணிக்கு சோக்கி கடற்கரையில் இருந்து 1600  மீட்டர் தூரத்தில் 17 மீட்டர் ஆழத்தில் இக் கருப்புப் பெட்டி மீட்கப் பட்டுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

Read more: கருங்கடலில் விபத்தில் சிக்கிய ரஷ்ய விமானத்தின் பிரதான கருப்புப் பெட்டி கண்டுபிடிப்பு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள கிறித்தவ காலனியான டொபா டெக் சிங் சிட்டி என்ற இடத்தில் டிசம்பர் 24 ஆம் திகதி இரவு நத்தார் விருந்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நூற்றுக் கணக்கானவர்கள் சட்டவிரோதமான டாக்ஸிக் கலந்த மதுவை (toxic liquor) அருந்தியதால் பரிதாபமாக குறைந்த பட்சம் 30 பேர் பலியானதுடன் 60 இற்கும் அதிகமானவர்கள் உடல் நலம் பாதிக்கப் பட்டுள்ளனர்.

Read more: நத்தார் தினத்தில் டாக்ஸிக் மது அருந்தி பாகிஸ்தானில் 30 பேரும் ஏரியில் மூழ்கி உகண்டாவில் 30 பேரும் பலி

 

நேற்று ஞாயிற்றுக்கிழமை உலகெங்கும் பரந்து வாழ்கின்ற கத்தோலிக்கர்கள் இயேசு பாலகனின் பிறந்த தினமான நத்தார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு மகிழ்ந்துள்ளனர்.

Read more: கிறிஸ்துமஸ் தினத்தன்று போப் ஃபிரான்சிஸ் இன் உரை! : சுருக்கம்

ஜப்பானில் இந்த ஆண்டில்தான் முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை குறைவு என்று தகவல் வெளியாகி உள்ளது. 

Read more: ஜப்பானில் இந்த ஆண்டில்தான் முதல் முறையாக பிறப்பு எண்ணிக்கை குறைவு!

ஞாயிற்றுக்கிழமை சிரியாவுக்குப் புறப்பட்டுச் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் கருங்கடலில் வீழ்ந்து விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த 92 பேரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப் படுகின்றது. மாஸ்கோவில்  இருந்து சிரியாவின் லட்டாக்கியா நகரை நோக்கிப் பயணித்த TU-154 ரக குறித்த விமானத்தில் ரஷ்ய துருப்புக்களை மகிழ்விக்கவென இசைக்குழுவினர், ஊடகத்துறையினர் என 84  பேரும் விமானிகள் சிப்பந்திகள் என 8 பேரும் என மொத்தம் 92 பேர் பணித்திருந்தனர்.

Read more: கருங்கடலில் வீழ்ந்த ரஷ்ய விமானம்! : 92 பேரும் பலி! : கருப்புப் பெட்டியைத் தேடும் பணி தீவிரம்!

நத்தார் தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை தென்னமெரிக்க நாடான சிலியின் தென் கடலோரப் பகுதிகளில் 7.6  ரிக்டர் அளவு கொண்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காலை 11.22 மணியளவில்

Read more: நத்தார் தினத்தில் சிலியைப் புரட்டிப் போட்ட பூகம்பம்! : பிலிப்பைன்ஸில் 4 பேரைப் பலி கொண்ட தைஃபூன் நொக் டென்

இன்று காலை லிபியாவில் இருந்து புறப்பட்ட ஆஃப்ரிகியாஹ் ஏர்வேஸ் இற்கு சொந்தமான விமானம் அங்கிருந்து மால்ட்டாவுக்கு மர்ம நபர்களால் கடத்தப் பட்டது. மேலும் மால்ட்டாவில் இவ்விமானம் சில நிபந்தனைகளுடன் தரையிறக்கப் பட்டது.

Read more: லிபிய விமானக் கடத்தல் காரர்கள் சரணடைவு : அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக விடுதலை

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்