வடகிழக்கு மலேசிய மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக 23 000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: மலேசிய வெள்ளப் பெருக்கில் 23 000 பேர் இடப்பெயர்வு

தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள சிறையொன்றை முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் தகர்த்ததில் ஒரு காவலாளி கொல்லப் பட்டதுடன் 150 இற்கும் அதிகமான கிளர்ச்சியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

Read more: பிலிப்பைன்ஸ் சிறைத் தகர்ப்பில் 150 இற்கும் அதிகமான கைதிகள் தப்பி ஓட்டம்

அந்தோனியோ குட்டேர்ஸ் ஐ.நாவின் ஒன்பதாவது பொதுச் செயலாளராக, 2017 ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் பதவியேற்றுக் கொண்டுள்ளார். போர்த்துக்கலின் முன்னாள் அதிபரான இவர், ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராக கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பணிபுரிந்தவர்.

Read more: ஐ.நாவின் புதிய பொதுச் செயலாளராக பதவியேற்றுள்ள அந்தோனியோ குட்டேர்ஸ் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை 

ஐ.நா சபையின் புதிய பொதுச் செயலாளராக போர்த்துக்கல்லின் மாஜி பிரதமர் ஆந்தோனியே கட்டரஸ் புதுவருட தினமான ஜனவரி 1 ஆம் திகதி முறைப்படி பதவியேற்றுக் கொண்டுள்ளார். முன்னதாக ஐ.நா இன் பொதுச் செயலாளராக நீடித்த பான் கீ மூன் இனது பதவிக் காலம் டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்ததை அடுத்து அவர் தனது  அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குப் பிரியாவிடை அளித்து விடைபெற்றார்.

Read more: ஐ.நா இன் புதிய பொதுச் செயலாளராக ஆந்தோனியோ கட்டரஸ் பதவியேற்பு! : பான் கீ மூன் விடைபெற்றார்

இந்தோனேசியாவின் இறையாண்மையை மதிக்காது செயற்பட்ட காரணத்தால் அவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவைத் தாம் நிறுத்திக் கொள்ளப் போவதாக புதன்கிழமை இந்தோனேசியா அதிரடியாக அறிவித்துள்ளது.

Read more: அவுஸ்திரேலியாவுடனான இராணுவக் கூட்டுறவை ரத்து செய்தது இந்தோனேசியா

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் புதுவருடத் தினத்தன்று 39 பேர் கொல்லப் பட்ட தீவிரவாதத் தாக்குதலுக்கு ISIS அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இஸ்தான்புல்லின் ரெய்னா என்ற இரவு விடுதியில்  நத்தார் தாத்தா வேடத்தில் உள் நுழைந்த தீவிரவாதி அங்கிருந்தவர்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 39 பேர் கொல்லப் பட்டதுடன் 70 பேர் வரை படுகாயம் அடைந்தனர்.

Read more: புதுவருடத் தினத்தில் 39 பேர் கொல்லப் பட்ட துருக்கி தாக்குதலுக்கு ISIS பொறுப்பேற்பு

2017 ஆம் ஆண்டு இறுதிக்குள் நடைபெறவுள்ள தேர்தலை அடுத்து கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அதிபரான ஜோசெஃப் கபிலா பதவி விலகுவார் என அண்மையில் கொங்கோ அரச கட்சிகள் எட்டிய சட்ட வரைவின் பிரகாரம் தீர்மானிக்கப் பட்டுள்ளதாக கத்தோலிக்க தேவாலயத்தின் முக்கிய செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read more: 2017 இறுதிக்குள் பதவி விலகும் நெருக்கடியில் கொங்கோ அதிபர் ஜோசெஃப் கபிலா

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்