மியான்மாரில் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் குறித்து UNSC இற்கு 23 நோபல் பரிசு வென்றவர்களின் குழுவும் பூகோள தலைவர்கள்  சிலரும் முறைப்பாடு செய்துள்ளனர். மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் மற்றும் இன அழிப்பு ஆகியவற்றைத் தடுக்க அந்நாட்டுத் தலைவரும் சமாதானத்துக்கான நோபல் பரிசு வென்றவருமான ஆங் சான் சூ க்யி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறித்த நோபல் பரிசு வென்றவர்கள் குழு ஐ.நா பாதுகாப்புச்  சபைக்கு எழுதியுள்ளது.

Read more: றோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரத்தில் ஆங் சான் சூ க்யி  இனை எச்சரிக்கும் உலகத் தலைவர்கள்

 

இந்த வருடம் புவி சுழற்சியில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் புத்தாண்டை வெகு விமரிசையாகக் கண்கவர் வான வேடிக்கையுடன் உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன.

Read more: ஒரு நொடி தாமதமாகப் பிறக்கும் புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடி வரும் உலக நாடுகள்...

சுமார் 52 வருடங்களாக நீடிக்கும் கொலம்பிய யுத்தத்தில் சிறியளவிலான குற்றங்களில் ஈடுபட்ட சுமார் ஆயிரக் கணக்கான FARC மார்க்ஸிஸ்ட் கொரில்லா போராளிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில் மன்னிப்புச் சட்டத்துக்கு  புதன்கிழமை அனுமதி வழங்கியிருப்பதாகக் கொலம்பிய காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Read more: ஆயிரக் கணக்கான FARC கிளர்ச்சியாளர்களுக்கு மன்னிப்பு வழங்கிய கொலம்பிய அரசு

அடுத்த வருடம் தமது முதல் கூட்டு இராணுவப் பயிற்சியை ஆரம்பிக்கவுள்ள சீனாவும் நேபாலும் அதற்கான ஆரம்ப கட்ட தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இது தொடர்பான செய்திகள் உரிய நேரத்தில் அறிவிக்கப் படும் எனவும் சீனப் பாதுகாப்பு அமைச்சு பேச்சாளர் யாங் யுஜுன் தெரிவித்துள்ளார்.

Read more: நேபாலுடன் தனது முதல் இராணுவப் பயிற்சியை அடுத்த வருடம் ஆரம்பிக்கின்றது சீனா

முன்னால் பாகிஸ்தான் பிரதமரான காலம் சென்ற பெனாசீர் பூட்டோவின் மகனான பிலாவல் பூட்டோ பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் படும் நிலையில் பாகிஸ்தானின் தேசிய சபையில் எதிரணியின் தலைவராக அவர் தேர்வாவதற்கான வாய்ப்பு உள்ளதாக இன்று வெள்ளிக்கிழமை அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் எதிரணியின் தலைவராக முன்வரவுள்ள பிலாவல் பூட்டோ

அமெரிக்க தேர்தல் பிரச்சார சமயத்திலும் தேர்தல் சமயத்திலும் ரஷ்யாவின் ஹேக்கிங் நடவடிக்கை இடம்பெற்றது எனக் குற்றம்  சாட்டி ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்த 35 ரஷ்ய உளவுத்துறை அதிகாரிகள் வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவு பிறப்பித்து இருந்ததுடன் ரஷ்யாவின் இரு புலனாய்வு ஏஜன்ஸிக்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளையும் விதித்திருந்தது.

Read more: அமெரிக்க தேர்தல் ஹேக் விவகாரம்! : 35 அமெரிக்க தூதர்களை வெளியேற்றும் ரஷ்யா

சிரிய அரசாங்கமும் கிளர்ச்சிக் குழுவும் யுத்த நிறுத்தத்துக்கு உடன் பட்டிருப்பதாகவும் சமாதானப் பேச்சுவார்த்தையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை டிசம்பர் 29 நள்ளிரவு முதல் சிரியாவில் யுத்த நிறுத்தம் அமுலுக்கு வரும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

Read more: வியாழன் நள்ளிரவு முதல் சிரியாவில் ரஷ்யா யுத்த நிறுத்த அறிவிப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்