மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இருந்து வெளியேறி பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ள இலட்சக் கணக்கான றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவவென விரைந்த மலேசிய உதவிக் கப்பல் இன்று திங்கட்கிழமை பங்களாதேஷை வந்தடைந்துள்ளது. சமீப காலமாக மனித உரிமை மீறல்கள் மற்றும் மியான்மார் பாதுகாப்புப் படையினரின் முறைகேடான செயல்கள் போன்றவற்றால் பாதிக்கப் பட்டு வரும் பல்லாயிரக் கணக்கான சிறுபான்மை றோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

Read more: பங்களாதேஷில் தஞ்சம் புகும் றோஹிங்கியா முஸ்லிம்களுக்கு உதவ விரைந்தது மலேசிய உதவிக் கப்பல்

 

இஸ்லாமிய கலாச்சாரத்துக்குப் புறம்பானது என்ற காரணத்தால் பாகிஸ்தான் முழுவதும் நாளை பெப்ரவரி 14 ஆம் திகதி காதலர் தினத்தைக் கொண்டாடத் தடை விதித்து இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்தத் தீர்ப்பை மதித்து நடக்குமாறு பாகிஸ்தானில் இயங்கி வரும் அனைத்து ஊடகங்களையும் அந்நாட்டின் ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

Read more: தனது நாட்டில் காதலர் தினம் கொண்டாடத் தடை விதித்தது பாகிஸ்தான்

இன்று ஞாயிற்றுக்கிழமை கிறீக்கின் 2 ஆவது மிகப் பெரிய நகரான தெஸ்ஸாலொனிக்கியில் 2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது இடப்பட்ட 250 Kg எடையுடைய செயல் நிலையில் இருந்த வெடிகுண்டு ஒன்றை வெற்றிகரமாக கிறீக் துருப்புக்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். இந்த நடவடிக்கையின் போது அப்பகுதியில் இருந்த சுமார் 70 000 மக்கள் தற்காலிகமாக வெளியேற்றப் பட்டனர்.

Read more: 70 000 மக்களை வெளியேற்றி 2 ஆம் உலக யுத்த வெடிகுண்டை செயலிழக்கச் செய்தது கிறீக் துருப்புக்கள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய கொள்கைகளுக்குத் தாக்குப் பிடிக்காமல் இந்தியாவிற்குள் வந்துள்ளது ஆரக்கிள் மென்பொருள் நிறுவனம். 

Read more: டிரம்ப் இம்சையால் இந்தியாவிற்குப் பறந்தது ஆரக்கிள்!

 

அமெரிக்காவில் உள்ள மிக உயரமான அணையான கலிபோர்னியாவின் ஒரோவில்லே (Oroville Dam) என்ற இடத்தில் அமைந்துள்ள அணை உடையும் அபாயம் ஏற்பட்டிருப்பதால் அப்பகுதியில் வசிக்கும் கிட்டத்தட்ட 200 000 பொது மக்கள் வெளியேற உத்தரவிடப் பட்டு  பொது மக்கள் வெளியேறி வருகின்றார்கள்.

Read more: கலிபோர்னியாவில் அணை  உடையும் அபாயம் : கிட்டத்தட்ட 200 000 பொது மக்கள் வெளியேற உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை காலை வடகொரியா மீண்டும் ஒருமுறை மத்திய வீச்சம் உடைய ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. வடக்கு பியோங்கன் பிராந்தியத்தில் இருந்து காலை  7:55 மணிக்கு பங்க்யான் ஏவுதளத்தில் இருந்து ஜப்பானின் கடல் எல்லைப் பகுதியில் விழுமாறு இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நிகழ்த்தியுள்ளது.

Read more: வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை : ஜப்பான் பிரதமர் அபே கண்டனம்

ஐ.நா பாதுகாப்புச் சபையில் உள்ள 5 நிரந்தர உறுப்பு நாடுகளில் ஒன்றான அமெரிக்கா அண்மையில் லிபியாவுக்கான ஐ.நா தூதுவராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒருவரை ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் தேர்ந்தெடுத்ததற்கு எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது. பாலஸ்தீனத்தின் முன்னால் பிரதமரான சலாம் ஃபய்யாட் என்பவரை லிபியாவுக்கான புதிய பிரதிநிதியாக ஐ.நா பாதுகாப்புச் செயலாளர் அந்தோனியோ குட்டெர்ரெஸ் அண்மையில் தெரிவு செய்திருந்தார்.

Read more: லிபியாவுக்கான ஐ.நா தூதராக பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு அமெரிக்கா எதிர்ப்பு

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்