சிரியாவின் அலெப்போ போரை  நிறுத்துவதில் அமெரிக்காவும், ரஷ்யாவும் மேற்கொண்ட யுத்த நிறுத்த முயற்சி தோல்வியடைந்துள்ளதுடன் அலெப்போ நகர் மீது அரச படைகள் பாரிய முற்றுகைப் போரை மேற்கொண்டுள்ளன.

Read more: சிரியாவில் அவலம்!:அலெப்போ முற்றுகையில் 20 இலட்சம் பேர் சிக்கியுள்ளனர்

உலகில் மிகப் பாரியளவில் வாழ்வியல் பிரச்சினைகளை சந்தித்து வரும் உள்நாட்டு பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்றகரமான கல்வியைக் கற்க வாய்ப்புக்களை ஏற்படுத்தித் தர வேண்டும் என சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு விடுத்துள்ளது. ஆகஸ்ட்டு 9 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சர்வதேச பூர்வீகக் குடிகள் தினத்தை உலகம் அனுசரித்துள்ள நிலையில் தான் ஐ.நா இந்த அழைப்பை விடுத்துள்ளது. 

Read more: உலகளாவிய பூர்வீகக் குடிகளுக்கு முன்னேற்ற கல்வி வழங்க ஐ.நா அழைப்பு

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் குறித்த தகவல்கள், தொழிநுட்பம் போன்றவற்றை அமெரிக்காவுக்கு இரகசியமாக வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் அந்நாட்டு அணு விஞ்ஞானியான 39 வயதுடைய ஷாரம் அமீரி இற்கு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளதாக ஈரான்  ஞாயிற்றுக்கிழமை உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

Read more: அமெரிக்காவுக்குத் தகவல் அளித்த குற்றத்துக்காக ஈரான் அணு விஞ்ஞானிக்கு மரண தண்டனை !

திங்கட்கிழமை பாகிஸ்தானின் பலுஜிஸ்தான் பகுதியில் குவெட்டா நகரில் உள்ள சன நெருக்கடி மிக்க  வைத்திய சாலை ஒன்றில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்  நிகழ்த்தப் பட்டு பின்னர் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப் பட்டுள்ளது. இதில் பலி எண்ணிக்கை 93 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

Read more: பாகிஸ்தான் மருத்துவமனையில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் : 93 பேர் பலி!

செவ்வாய்க்கிழமை இரவு ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கும் பிரேசிலின் தலைநகர் ரியோ டீ ஜெனீரோவில் பத்திரிகையாளர் சென்று கொண்டிருந்த பேருந்து  ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப் பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Read more: பிரேசிலில் பத்திரிகையாளர் சென்ற பேருந்து மீது துப்பாக்கிச் சூடு

தென்னமெரிக்க நாடான மெக்ஸிக்கோவில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை காரணமாக ஆங்காங்கே பாரிய நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. நிலச்சரிவுகளில் மாத்திரம் சிக்கி 39 பேர் வரை பலியாகி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. முக்கியமாக மலைப் பிரதேச நகரங்களான பியூப்லா மற்றும் வெராகுரூஸ் ஆகியவற்றில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

Read more: மெக்ஸிக்கோ நிலச்சரிவில் 39 பேர் பலி! : ஜவியர் புயல் எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை தனது ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசி பேரழிவை ஏற்படுத்திய தினத்தின் 71 ஆவது நிறைவு  அஞ்சலியை ஜப்பான் அரசு அனுட்டிக்கின்றது. இதற்காக டோக்கியோவின் நினைவகத்தில் ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே தலைமையில் ஒன்று கூடிய சுமார் 50 000 பொது மக்கள் 7 தசாப்தங்களுக்கு முன் ஹிரோசிமாவில் அணுகுண்டு வெடித்த அதே நேரத்தில் எழுந்து நின்று தமது இன்னுயிரைத் துறந்த மக்களுக்கு அஞ்சலியை செலுத்தினர். 

Read more: ஹிரோஷிமா அணுகுண்டுத் தாக்குதலின்  71 ஆவது ஆண்டு நிறைவை அனுட்டிக்கும் ஜப்பான்

More Articles ...

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்