உலகம்
Typography

உலகின் மிகப்பெரிய பாலைவனமான ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள சஹாரா பாலைவனத்தில் 40 ஆண்டுகளுக்குப் பின் அரிய நிகழ்வாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

அதிலும் சில இடங்களில் பனிப்பொழிவு 15 இன்ச் வரை மூடியுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் வியப்படைந்துள்ளனர். வடக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் சுமார் 90 இலட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் கிட்டத்தட்ட அமெரிக்காவின் நிலப்பரப்புக்குச் சமனானது ஆகும். சிவப்புப் பாலைவனமான இதன் அய்ன்செஃப்ரா மற்றும் அல்ஜீரியப் பகுதிகளில் கம்பளம் விரித்தாற் போன்று அழகிய பனிப்படலம் படர்ந்து காணப் படுகின்றது.

இம்முறை ஐரோப்பியக் கண்டத்தின் தெற்கே அதிக வளிமண்டல அழுத்தமும் குளிர்க்காற்றும் வட ஆப்பிரிக்காவை நோக்கி இழுக்கப் படுவதால் தான் இந்த அரிய பனிப்பொழிவு என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் ஃபோர்ப்ஸ் பத்திரிகைத் தகவல் படி இந்த பனிப்படலம் வெறும் மதியம் வரை மாத்திரமே நீடித்ததாகவும் அதன்பின் நிலவிய 42 டிகிரி வெப்பத்தில் அது உருகி விட்டதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் சிறுவர்களுக்கு உற்சாகத்தையும் ஸ்நோவ் மேன் போன்ற பொம்மை விளையாட்டுக்களையும் மேற்கொள்ள இந்தக் காலப் பகுதி போதுமானதாக இருந்ததாகவும் தெரிய வருகின்றது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்