உலகம்
Typography

கடந்த வெள்ளிக்கிழமை முதற்கொண்டு மடகாஸ்காரைத் தாக்கி வரும் அவா புயலின் சீற்றத்துக்கு 29 பேர் பலியாகியும் 22 பேர் காணாமற் போயும் உள்ளதுடன் 80 000 பேர் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகி உள்ளதாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

அதிகபட்சமாக மணிக்கு 190 Km வேகத்தில் காற்று வீசியதில் பல மரங்கள் வேரோடு பிடுங்கி எறியப்பட்டும் சாலைகள் சேதமடைந்தும் வீடுகள் பழுது பட்டும் உள்ளன. மின் கம்பங்கள் சாய்ந்ததால் பல இடங்களில் மின் இணைப்பும் துண்டிக்கப் பட்டுள்ளது. முக்கியமாக மடகாஸ்காரின் கிழக்குப் பகுதியும் தலைநகர் அண்டனானரிவோ மற்றும் துறைமுக நகரங்களான டோமாசினா, டமட்டாவே போன்றவை அதிகம் பாதிக்கப் பட்டுள்ளன. இங்கு கனமழை காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ளது.

தற்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட பகுதிகளில் இருந்து 10 000 இற்கும் அதிகமான பொது மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப் பட்டு வருகின்றனர். வறியதும் அபிவிருத்தியடைந்து வருவதுமான நாடாகிய மடகாஸ்காரில் கடந்த சில வருடங்களாக கடும் வறட்சி நிலவி வருகின்றது. இங்கு மார்ச் மாதம் தாக்கிய எனாவோ புயலில் 78 பேர் பலியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்