உலகம்
Typography

அண்மையில் டிரம்ப் குறித்தும் வெள்ளை மாளிகையில் அவரது வாழ்க்கை குறித்தும் 'Fire and fury : Inside the trumps white house' என்ற புத்தகத்தை எழுதி மைக்கேல் வுல்ஃப் என்ற பத்திரிகையாளர் வெளியிட்டிருந்தார்.  டிரம்ப் குறித்த பல முக்கிய தகவல்கள் அடங்கியிருப்பதால் ஆடிப் போயுள்ளார் அவர்.

ஒரே நாளில் வைரல் ஆன இப்புத்தகம் அமெரிக்காவின் பெஸ்ட் செல்லராகவும் ஹாரி போட்டரை விட முதலிரு நாட்களில் அதிகம் விற்பனையாகியும் உள்ளது குறிப்பிடத்தக்கது.  இப்புத்தகத்தில் முக்கியமாக டிரம்ப் தனது உயிர்ப் பாதுகாப்புக் குறித்து மிக அதிகளவு பயப்படுவதும் அவர் அதிகம் சினிமா பார்ப்பார் மற்றும் வெள்ளை மாளிகையில் அவருக்குப் பிடிக்காத நிறைய விடயங்கள் உள்ளது என்றும் அவரின் மகள் இவாங்கா டிரம்பே அவரின் பதவியைப் பறிக்க சதித் திட்டம் தீட்டியதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இதில் டிரம்புக்கு மனநலம் சற்று சரியில்லை எனக் குறிப்பிடப் பட்டுள்ளதும் முக்கியமானது.

தற்போது இந்தப் புத்தகத்துக்கு டிரம்ப் எதிர்வினையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில் அவர் தான் ஒரு மேதை எனவும் முட்டாள் அல்ல என்றும் தன்னைப் பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்பி வரும் இப்புத்தகத்தை நம்ப வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார். மறுபுறம் வடகொரிய விவகாரத்தில் அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன் உடன் நேரடியாகப் பேசத் தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறியுள்ளார். மேலும் வடகொரியப் பிரச்சினையினைத் தீர்க்க பேச்சுவார்த்தையில் தனக்கு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் தென்கொரியாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வடகொரிய அரசு விருப்பம் தெரிவித்து இருப்பதையும் அமெரிக்கா வரவேற்பதாகவும் இந்த ஈடுபாட்டை ஒலிம்பிக்கிற்கு அப்பால் பேச்சுவார்த்தைகளிலும் காட்ட அந்நாட்டு முன் வந்தால் இன்னும் பெரிய காரியமாக இருக்கும் எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்