உலகம்
Typography

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஈரான் அரசுக்கு மிகவும் கடுமையான நெருக்கடி கொடுத்த ஆர்ப்பாட்டங்களாகக் கடந்த வாரம் வியாழக்கிழமை தொடக்கம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் அமைந்திருந்தன.

இவை முக்கியமாக நாட்டில் சரிவடைந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் விலைவாசி என்பவற்றுக்கு எதிராக அமைந்திருந்தன. இந்த ஆர்ப்பாட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் 21 பேர் கொல்லப் பட்டும் 450 பேர் கைது செய்யப்பட்டும் இருந்தனர்.

இதைத் தொடர்ந்து செவ்வாய் இரவு அரசுக்கு சார்பாகவும் அமெரிக்காவுக்கு எதிராகவும் தலைநகர் டெஹ்ரான் உட்பட 10 நகரங்களில் பேரணிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தொடர்ந்து இன்று புதன்கிழமையும் முன்னதாக அரசுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களுக்கு மாற்றாக இப்பேரணிகள் அமைந்துள்ளன. இதன்போது முக்கியமாக அமெரிக்காவுக்கு எதிரான பதாதைகளும் கோஷங்களும் எழுப்பப் பட்டன. ஏனெனில் ஈரானில் அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும் திட்டமிட்டு வன்முறையையும் குழப்பத்தையும் ஏற்படுத்த முனைகின்றன என்பதே இவர்களது குற்றச்சாட்டு ஆகும்.

இந்த அமைதிப் பேரணிகளில் மாணவர்கள் வயதானவர்கள் எனக் குடும்பத்தின் அனைத்து அங்கத்தவர்களும் பங்கு பற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்