உலகம்
Typography

அண்மையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பாலஸ்தீனத்துக்கான வருடாந்த உதவித் தொகையில் $ 300 மில்லியன் நீக்கப் படும் என ஜெருசலேம் விவகாரம் காரணமாக அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

இந்த அச்சுறுத்தலுக்கு நாம் அஞ்சவோ அடிபணியவோ மாட்டோம் என இன்று புதன்கிழமை பாலஸ்தீன தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்பானது பல வருடங்களாக மிகவும் அவதானத்துடன் மேற்கொள்ளப் பட்டு வந்த இஸ்ரேல் பாலஸ்தீன இராஜதந்திர நகர்வுகளை அப்படியே புரட்டிப் போடும் விதத்தில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக டிரம்ப் அறிவித்ததில் இருந்து வெள்ளை மாளிகைக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ் இஸ்ரேல் பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா எந்தவொரு தலையீட்டையும் மேற்கொள்ளும் தகுதியை இழந்து விட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் பாலஸ்தீனம் சர்வதேசத்தின் உதவித் தொகையில் தீவிரமாகத் தங்கியிருப்பதும் அதற்கு சிக்கல்களை ஏற்படுத்தி வருகின்றது. உதாரணமாக நாம் பாலஸ்தீனத்துக்கு ஒவ்வொரு வருடமும் நூற்றுக் கணக்கான மில்லியன் டாலர் உதவித் தொகையை வழங்கி வரும் போதும் அவர்களிடம் இருந்து எந்தவொரு மரியாதையோ அல்லது அங்கீகாரத்தையோ பெற்றதில்லை என டிரம்ப் டூவீட் செய்துள்ளதைக் கூறலாம்.

மறுபுறம் இஸ்ரேல் ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவிடம் இருந்து இராணுவ உதவி நிதித் தொகையாக 3 பில்லியன் டாலர்கள் வரை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்