உலகம்
Typography

இன்று வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்வதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

இதன் மூலம் தனது அண்டை நாடான நியூசிலாந்துடன் இணைந்து ஓரினச்சேர்க்கை திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளித்த நாடுகளின் பட்டியலில் 28 ஆவது நாடாக அவுஸ்திரேலியா இடம்பிடித்துள்ளது. நவம்பரில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டிருந்த ஓரினச் சேர்க்கையாளர்களுக்கான சட்ட மசோதாவுக்கு 150 உறுப்பினர்களில் 5 பேர் மாத்திரமே எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நாள் அன்புக்கும் மரியாதைக்கும் பாலின சமவுரிமைக்கும் பெருமை சேர்த்த மிகச் சிறந்த நாள் என அவுஸ்திரேலிய பிரதமர் டர்ன்புல் கருத்துத் தெரிவித்துள்ளார். இந்த சட்டம் அங்கீகரிக்கப் பட்டதை அடுத்து அடுத்த ஆண்டு பெப்ரவரி முதல் அவுஸ்திரேலியாவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகில் ஒரு பாலின திருமணத்துக்கு ஏற்கனவே சட்ட அங்கீகாரம் அளித்த நாடுகளாக ஆர்ஜெண்டினா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, டென்மார்க், ஃபின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, லுக்ஸம்பேர்க், மால்ட்டா, மெக்ஸிக்கோ, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, போர்த்துக்கல், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின், சுவீடன், பிரிட்டன், அமெரிக்கா மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் விளங்குகின்றன.

இது தவிர தாய்வான், ஆஸ்ட்ரியா, இஸ்ரேல் மற்றும் ஆர்மெனியா ஆகிய நாடுகள் ஓரினச்சேர்க்கை திருமணத்தை சட்டபூர்வமாக்குவது தொடர்பில் பரிசீலனை செய்து வருகின்றன.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்