உலகம்
Typography

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அறிவிப்பதற்கு சீனா, பிரான்ஸ், ஜோர்டான் மற்றும் துருக்கி ஆகியவை உட்பட மத்திய கிழக்கு நாடுகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

1967 இல் இடம்பெற்ற மத்திய கிழக்குப் போரின் பின்னர் பாலஸ்தீனத்திடம் இருந்து ஜெருசலேம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் வந்தது. இதையடுத்து 1980 முதல் ஜெருசலேத்தை தனது நிர்வாகத்தின் கீழ் இணைத்த இஸ்ரேல் அருகே இருக்கும் வெஸ்ட் பேங்கிலும் குடியிருப்புக்களை அமைத்து வந்துள்ளது. ஏற்கனவே ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்த நிலையில் தான் தற்போது அந்நகரை இஸ்ரேலின் தலைநகராக்க அமெரிக்கா முடிவு செய்து அறிவிப்பு வெளியிடவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் கசிந்துள்ளன.

அமெரிக்காவின் இம்முடிவுக்கு எதிராக பாலஸ்தீன அதிபர் மஹ்மூட் அப்பாஸ் சர்வதேசத்தின் ஆதரவைத் திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். மேலும் இன்று புதன்கிழமை மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐ.நா இன் அமைதித் தூதுவர் நிக்கோலே மிலெடொனொவ் இது தொடர்பில் இஸ்ரேல் பாலஸ்தீனத் தலைவர்கள் நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான துருக்கியோ அதிபர் டிரம்பின் இம்முடிவு மூடத் தனத்தையும் சகிப்புத் தன்மை இன்மையையும் தான் காட்டுவதாகவும் இது உலகின் அமைதியைக் குழப்பி பேரழிவுக்கு வழி வகுக்கக் கூடியது என்றும் தெரிவித்துள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்