உலகம்
Typography

யேமெனில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அதன் முன்னால் அதிபர் அலி அப்துல்லா சாலேஹ் ஸ்நைப்பர் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப் பட்டுள்ளதாகவும் பின்னர் அவரது இல்லம் குண்டு வைத்துத் தகர்க்கப் பட்டதாகவும் இன்று திங்கட்கிழமை சவுதியின் அல் அரேபியா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில வருடங்களாக யேமெனின் தலைநகர் சனாவில் ஈரானின் ஆதரவுடன் போரில் ஈடுபட்டு வரும் ஹௌத்தி போராளிகளுக்கு முதலில் ஆதரவாகவும் பின்னர் எதிராகவும் செயற்பட்டு வந்த சாலேஹ் அவரது இல்லத்தில் வைத்து முதலில் ஸ்நைப்பர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார். இதனை சாலேஹ் இனது கட்சியான பொது மக்கள் காங்கிரஸ் உறுதிப் படுத்தியுள்ளது.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஹௌத்தி போராளிகள் வெளியிட்ட வீடியோ பதிவில் சாலேஹ் இனது என நம்பப் படும் சடலம் ஒன்று காண்பிக்கப் பட்டுள்ளது. யேமெனின் அதிபராக சர்வதேசத்தால் ஏற்றுக் கொள்ளப் பட்ட மன்சூர் ஹடி என்பரை ஆட்சியில் அமர்த்தி ஹௌத்திக்களைத் தோற்கடிப்பதற்காக சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் கடந்த 3 வருடங்களாகப் போரிட்டு வருகின்றன.

அமெரிக்கா மற்றும் ஏனைய மேற்குலக நாடுகளின் புலனாய்வு உதவியுடன் தலைநகர் சனா உட்பட யேமெனின் ஹௌத்திக்கள் வசிக்கும் நிலைகள் மீது சவுதி தலைமையிலான கூட்டணி நாடுகள் வான் வழித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இத்தாக்குதல்களில் பல நூற்றுக் கணக்கான மக்கள் இதுவரை கொல்லப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்