உலகம்
Typography

இந்தியாவின் நிதியுதவியுடன் ஈரானில் கட்டப்பட்ட சபாஹர் துறைமுகம் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. ஈரானில் ஓமன் வளைகுடாப் பகுதியில் அரபிக் கடலை ஒட்டி இந்த சபாஹர் துறைமுகம் கட்டப்பட்டுள்ளது.

இந்தியா இதற்காக ஒதுக்கிய நிதித் தொகை 3300 கோடி ரூபாய்கள் ஆகும். தற்போது இதில் 2200 கோடி ரூபா செலவில் முதற்கட்டப் பணிகள் முடிந்த நிலையில் தான் ஈரான் அரசால் இத்துறைமுகம் திறக்கப் பட்டுள்ளது. கடந்த மே மாதம் ஆரம்பிக்கப் பட்ட இப்பணியில் தற்போது வரை 85 இலட்சம் டன்னுக்கு கையாளும் திறன் உயர்ந்துள்ளது. மேலும் இதில் 5 கப்பற் தளங்கள் அமைக்கப் பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தரை, கடல் மற்றும் வான் என 3 மார்க்கமாகவும் இந்த சபாஹர் துறைமுகம் பயன்படுத்தப் படக்கூடிய விதத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இந்த துறைமுகத்தின் கட்டமைப்பின் மூலமாக இந்தியப் பெருங்கடலில் ஆசிய நாடுகளுக்குப் பொருட்களை எடுத்துச் செல்வதற்கான தூரம் குறைவடைந்துள்ளது. முன்னதாக மத்திய கிழக்கு நாடுகளுக்கான இந்தியாவின் கடல் வழி வர்த்தகம் பாகிஸ்தானூடாகவே நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்