உலகம்
Typography

அண்மையில் சீனா மற்றும் மாலைத்தீவுகள் இடையே மேற்கொள்ளப் பட்ட வர்த்தக ஒப்பந்தத்தில் மாலைத்தீவுடன் கடல் வழிப்பாதையாக வர்த்தகம் மேற்கொள்ள 100 மில்லியன் டாலர்களை சீனா மாலைத்தீவுகளுக்கு வழங்கியுள்ளது. இது மாலைத்தீவுகளுடனான தாராள வர்த்தக ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப் பட்டிருப்பதால் இந்த ஒப்பந்தம் ஆபத்தானது என இந்தியா இதற்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே சீனாவின் கடலாதிக்கம் தெற்காசியக் கடற்பரப்பில் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் அதிகரித்து வரும் நிலையில் தான் மாலைத்தீவுடன் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. மாலைத் தீவுகளின் பாராளுமன்றத்தில் அவசர கூட்டம் நடைபெற்றே எந்த வித எதிர்ப்பும் இன்றி இந்த வர்த்தக ஒப்பந்தத்துக்கான அறிக்கை தாக்கலுக்கு ஒப்புதல் பெறப்பட்டிருந்தது. சீனாவுக்கு அதிக இலாபத்தைத் தரக்கூடிய இந்த ஒப்பந்தம் மாலைத்தீவுகளை கடனில் மூழ்கடித்து விடும் எனவும் இதனால் அங்கு பெரும் அரசியல் குழப்பநிலை தோண்றவும் வாய்ப்பு உள்ளது என அந்நாட்டின் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னால் அதிபருமான முகமது நசீத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Most Read