உலகம்
Typography

கடந்த சில வருடங்களாக மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் சிறுபான்மை றோஹிங்கியா முஸ்லிம்கள் மீதான அந்நாட்டு பௌத்த பேரினவாத அரசின் அடக்குமுறை மற்றும் வன்முறை அதிகரித்து வருகின்றது.

இதனால் இதுவரை இந்த மாநிலத்தில் இருந்து 6 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புக வேண்டி ஏற்பட்டதுடன் இவர்களுக்கு முறையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க அந்நாடுகளுக்கு இயலாத காரணத்தால் பெரும் மனித அவலம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ஐ.நா பாதுகாப்புச் சபை அண்மையில் ராக்கைன் மாநிலத்தில் மிகையாகப் பயன்படுத்தப் பட்டு வரும் இராணுவத்தை மீட்குமாறு மியான்மார் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

15 நாடுகள் பங்கேற்கும் ஐ.நா பாதுகாப்பு சபையின் நவம்பர் மாத அதிபரான இத்தாலியைச் சேர்ந்த செபஸ்டியானோ கார்டோ விடுத்த அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது 'பூர்வீகம், மதம் மற்றும் குடியுரிமை நிலமை என்ற எந்தவிதப் பாகுபாடும் இன்றி ராக்கைனில் வசிக்கும் றோஹிங்கியா மக்களின் பெண்கள், குழந்தைகள் என அனைவரது உரிமையையும் சுதந்திரத்தையும் நிலைநாட்ட மியான்மார் அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக பாலியல் வன்கொடுமைகளை உடனே நிறுத்தி 2013 உடன்படிக்கைக்கு இணைவாக அனைத்து நடவடிக்கைகளையும் அமுல் படுத்த வேண்டும்' எனப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப் பட்டுள்ள அனைத்துப் பகுதிகளுக்கும் ஐ.நா மற்றும் மனித உரிமைகள் அமைப்பை அனுமதிக்க வேண்டும் எனவும் கோரப் பட்டுள்ளது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்