உலகம்
Typography

ஆப்கான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள ஷாம்சாட் என்ற தொலைக்காட்சி நிலையம் மீதி ISIS தீவிரவாதிகள் இன்று செவ்வாய்க்கிழமை  நடத்திய தாக்குதலில் இரு பாதுகாவலர்கள் கொல்லப் பட்டுள்ளனர்.

தாக்குதல் இடம்பெற்று சிலமணி நேரங்களுக்குள் தொலைக்காட்சி சேவை வழமைக்குத் திரும்பியுள்ளது. அண்மைக் காலமாக ஆப்கானில் ஊடகவியலாளர்கள் மீது தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் இன்று போலிஸ் போன்று உடையணிந்து உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் 20 இற்கும் அதிகமானவர்கள் காயம் அடைந்தும் உள்ளனர்.

பிபிசி செய்திகளை ஒளிபரப்பும் உரிமையைப் பெற்றுள்ள ஷாம்சாட் தொலைக்காட்சி காபூலில் இருந்து செய்திகளையும் இன்னும் சில நிகழ்ச்சிகளையும் பஷ்டோ மொழியில் ஒளிபரப்பி வரும் ஊடகம் ஆகும். உலகில் ஊடகச் சுதந்திரத்துக்கும் பத்திரிகை சுதந்திரத்துக்கும் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் விளங்குகின்றது. இங்கு மே மாதம் காபூலில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் பிபிசி ஊடக ஓட்டுனர் உட்பட இருவர் பலியானயதுடன் ஆப்கானின் 1 டிவி சேனலும் மோசமாக சேதமடைந்தது.

இதே மாதம் ஜலாலாபாத்திலுள்ள ஆப்கான் அரச தொலைக்காட்சி நிலையம் மீது தொடுக்கப் பட்ட தாக்குதலில் 6 பேர் பலியாகி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்